மரன்ஹவோ மாநிலத்தில் மொன் நகரைச் சேர்ந்த 18 வயது மற்றும் 21 வயதான மேற்படி இரு சகோதரர்களும் தூக்க மாத்திரைகளை கொடுத்து தமது தந்தையை மயக்கி உயிருடன் புதைத்து அவரை படுகொலை செய்துள்ளமை பிரேதபரிசோதனை அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக நகர பொலிஸ் தலைமையதிகாரி அந்தோனியோ வலென்ட் பில்ஹோ தெரிவித்தார்.
மேற்படி சகோதரர்களுக்கு அவர்களது தந்தையை புதைப்பதற்கு குழியொன்றைத் தோண்ட உதவி செய்தமை தொடர்பில் அயலவர் ஒருவரையும் கைது செய்து விசாரித்து வருவதாக அவர் கூறினார். படுகொலை செய்யப்பட்டவர் ஆபிரிக்க பிரேசில் கலப்பினத்தைச் சேர்ந்த மதத் தலைவராவார்.
தமது தந்தை அளவுக்கதிகமாக குடித்து விட்டு தம்மிடம் மிகவும் வன்முறையாக நடந்து கொண்ட தாகவும் தமது ஓரின சேர்க்கை பாலியல் நடவடிக்கைகளுக்கு அவர் தடையாக இருந்ததாகவும் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரும் தெரிவித்ததாக அந்தோனியோ வலென்ட் பில் ஹோ கூறினார்
இந்த சகோதரர்களுக்கு குழியை தோண்டுவதற்கு உதவி செய்த அயலவர், அது தொடர்பில் ஏனையோருக்கு தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகம் கொண்ட சகோதரர்களின் மாமனார் ஒருவர் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ததையடுத்தே உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக