வியாழன், 13 ஜனவரி, 2011

கைகுலுக்க தடை

ஆண்களும் பெண்களும் கைகுலுக்கிக் கொள்வதற்கு சோமாலிய ஜோவ்ஹார் நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அல்ஷபாப் போராளி அல்ஷபாப் போராளிகள் குழுவின் கட்டுப்பாட்டிலுள்ள மேற்படி நகரில் உறவினரல்லாத ஆண்களும் பெண்களும் ஒன்றாக நடந்து செல்வதற்கும் பொது இடங்களில் உரை யாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சோமாலியாவில் இவ்வாறு சமூக தடைகள் சட்டமாக அறிகப்படுத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

மேற்படி தடைகளை மீறுபவர்கள் சாட டையடித் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.

ஏற்கனவே அல்ஷபாப் போராளிகள் தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் பாடல்களையும் இசை களையும் ஒலிபரப்புவதற்கும் கேட்பதற்கும் தடை விதித்துள்ளனர்.

சோமாலியாவானது 1991 ஆம் ஆண்டிலிருந்து உறுதியான அரசாங்கமொன்று இல்லாத நாடாக விளங்கி வருகிறது.

ஐக்கிய நாடுகள் ஆதரவுடன் செயற்படும் அரசாங்கம், தலைநகர் மொகாடிஸுவின் பகுதிகளையும் ஏனைய சில பிரதேசங்களையும் மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல