வியாழன், 13 ஜனவரி, 2011

குஜராத்தில் ஒரு நகல் தாஜ்மகால்

குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தில், நிஜ தாஜ்மகாலின் அளவில், நகல் தாஜ்மகால் ஒன்றை நான்கு ஆண்டு கால உழைப்பில் கலை பொருட் கள் தயாரிப்பாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஏழு உலக அதிசயங்களில் இடம் பெற்றுள்ள காதலின் சின்னமாகவும், பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்ட அற்புத மாகவும் திகழும் தாஜ்மகாலை, உலகம் முழுவதிலிருந்தும் பல்வேறு தரப்பினரும் வந்து பார்த்து வியந்து செல்கின்றனர். அண்மையில் இந்தியா வந்த பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியும், அவரது மனைவி கர்லா புரூனியும் தாஜ்மகாலை வந்து சுற்றிப் பார்த்து சென்றனர்.

இந்த நிஜ தாஜ்மகால் போன்று, குஜராத் மாநிலத்தில், கலை பொருட்கள் தயாரிக்கும் குழுவினர் 54 பேர் இணைந்து நகல் தாஜ்மகாலை உருவாக்கியுள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள தோல்கா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கலை பொருட்கள் தயாரிப்பவர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். கடவுள் சிற்பங்கள், நாட்டில் உள்ள, பாரம்பரிய சின்னங்கள் உள்ளிட்டவற்றை சிறு சிறு பொம்மைகளாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கு தாஜ்மகாலை அதன் நிஜ அளவிலேயே உருவாக்கினால் என்ன என்று தோன்றியது. அதன்படி, கட்டடக்கலை நிபுணரும், கலைபொருள் தயாரிப்பாளருமான இஸ்தி யாக் அலி தலைமையில் 54 பேர் கொண்ட குழுவினர் இணைந்து 51 அடி உயரமும், 72 அடி நீள, அகலமும் கொண்ட மிகப்பெரிய தாஜ்மகாலை உருவாக்கினர். தெர்மாக்கோல் மற்றும் பிளைவுட்டுகளைக் கொண்டு அச்சு அசலாக, இந்த நகல் தாஜ்மகால் உருவாக் கப்பட்டது. ரூ. 90 இலட்சம் செலவில், நான்கு ஆண்டுகளில் இது உருவாக்கப்பட்டது.

இது குறித்து, குழுவின் தலைவர் இஸ்தியாக் அலி கூறியதாவது:

நாங்கள் தாஜ்மகாலை சிறு சிறு பொம்மைகளாக உருவாக்கியிருக்கிறோம். ஆனால், பெரிய அளவில் அதனை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் திடீரென தோன்றியது. உடனடியாக அதனை செயல்படுத்தியுள்ளோம். இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. ஆகராவுக்குப் போய் நிஜ தாஜ்மகாலை பார்க்க முடியாதவர்கள் இங்கு, வந்து இந்த தாஜ்மகாலை பார்க்கலாம். பிளைவுட் மற்றும் தெர்மாகோல் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை சேதமடையாமல் பிரித்து, மீண்டும் வேறு இடத்தில் எளிதாக கட்டும் விதத்தில் உருவாக்கியுள்ளோம. இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை 35 லொறிகளில் ஏற்ற வேண்டும். வெவ்வேறு நகரங்களுக்கு கொண்டு சென்று மக்கள் பார்வைக்கு வைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதனை உருவாக்கும்போது சாதனை புத்தகத்தில் இடம்பெற வைக்க வேண்டும் என்ற யோசனை எதுவும் எங்களுக்கு இல்லை. இப்போது, நண்பர்களின் தூண்டு தல், இந்த படைப்பை சாதனை புத்தகங் களில் இடம்பெற வைக்க முயற்சி மேற்கொண் டுள்ளோம் என இஸ்தியாக் அலி கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல