புதன், 5 ஜனவரி, 2011

குமார் பொன்னம்பலத்தின் நினைவு நாள்

குமார் பொன்னம்பலம் ஒரு தமிழ் அரசியல்வாதி ஆவர். இவர் ஜி. ஜி. பொன்னம்பலத்தின் மகனாவர். இவர் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அரசியல் வாழ்க்கை

இவரது தந்தையார் உயிரோடிருந்த காலத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார் ஆயினும் தேர்தல்கள் எதிலும் போட்டியிடவில்லை. இவர் சார்ந்திருந்த தமிழ்க் காங்கிரஸ் கட்சி 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர் கூட்டணியின் ஒரு உறுப்புக் கட்சி ஆகியது. தமிழர் கூட்டணி உருவாக்கப்பட்ட பின்னர் 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கு முன்னரே குமாரின் தந்தை ஜீ. ஜீ. பொன்னம்பலமும், எஸ். ஜே. வி. செல்வநாயகமும் காலமாகிவிட்டனர்.

இத் தேர்தலில் கூட்டணி சார்பில், தனது தந்தை பல தடவைகள் போட்டியிட்டு வெற்றி பெற்ற யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிடுவதற்குக் குமார் பொன்னம்பலம் விருப்பம் கொண்டிருந்தார். எனினும் ஏற்கெனவே உறுப்புக் கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதியிலேயே அக் கட்சியினர் போட்டியிட வேண்டும் என்ற கொள்கைக்கு அமையக் காங்கிரஸ் கட்சியினருக்கு, யாழ்ப்பாணத் தொகுதி ஒதுக்கப்படவில்லை, பதிலாக வட்டுக்கோட்டைத் தொகுதி குமாருக்கு ஒதுக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொள்ளாத குமார் யாழ்ப்பாணத் தொகுதியில் தனித்துப் போட்டியிட முடிவு செய்தார். எனினும் இவரால் வெற்றி பெற முடியவில்லை. கூட்டணி சார்பில் எத்தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிபெற முடியும் என்ற நிலை இருந்தும், கிடைத்த தொகுதியை ஏற்காது தனித்துப் போட்டியிட்டதன் மூலம் தனது வாழ்வில் பாராளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பை அவர் இழந்துவிட்டார்.

1977 தேர்தலுக்குப் பின்

1977 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ்க் காங்கிரஸ் கட்சியை மீண்டும் தனியாக இயங்கச் செய்வதில் குமார் ஆர்வம் காட்டினாலும், பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணியிலேயே இயங்கினர். இத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ்ப் பகுதிகளில் மிதவாதிகளின் கை தாழ்ந்து வந்தது. தீவிரவாதம் முனைப்புடன் தலை தூக்கியது. காலப்போக்கில் சொந்தக் காலில் நின்று தேர்தல்களில் போட்டியிடுவதற்கு எந்த மிதவாதக் கட்சிக்குமே வாய்ப்புக் கிட்டவில்லை.

எனினும், முழு நாட்டுக்கும் நடைபெற அதிபர் தேர்தலில் குமார் பொன்னம்பலம் போட்டியிட்டார். வெற்றிபெற முடியாது என்பது உறுதியாக இருந்தும், தமிழீழத்துக்கான, நாடு முழுவதிலும் உள்ள தமிழ் மக்களின் ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் தமிழ் மக்கள் அனைவரும் தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
-----------------------------------------

1846: அமெரிக்காவின் ஓரிகன் பிராந்தியத்தை பிரிட்டனுடன் பகிர்ந்துகொள்ளும் திட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றம் நிராகரித்தது.

1854: சான் பிரான்ஸிஸ்கோவில் கப்பலொன்று மூழ்கியதால் சுமார் 300 பேர் பலி.

1896: வில்லியம் ரொஞ்ஜன் கதிர்வீச்சொன்றை கண்டுபிடித்ததாக ஆஸ்திரிய பத்திரிகையொன்று செய்திவெளியிட்டது. இக்கதிர்வீச்சு எக்ஸ்றே கதிர் எனப் பிரபலமாகியது.

1909: பனாமாவின் சுதந்திரத்தை கொலம்பியா அங்கீகரித்தது.

1940: எவ்.எம். வானொலி முதல்தடவையாக இயக்கிக் காண்பிக்கப்பட்டது.

1971: உலகின் முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில்  மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.

1976: கம்போடியாவின் பெயர் 'ஜனநாயக கம்பூச்சியா' என மாற்றப்பட்டது.

1993:  ஸ்கொட்லாந்துக்கு அருகில் எண்ணெய் தாங்கி கப்பலொன்று மூழ்கியதால் 84,700 தொன் எண்ணெய் கடலில் கசிந்தது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல