புதன், 5 ஜனவரி, 2011

யாழ். செம்மணியில் அரைகுறை ஆடைகளுடன் இளைஞர் கும்பல் அட்டகாசம்!

யாழ். செம்மணி நீரேரியில் இளைஞர் கும்பல் ஒன்று மது போதையில் அரைகுறை ஆடைகளுடன் நீராடியதுடன் வீதியில் வாகனங்களில் சென்றவர்களுடனும் பகிடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளானதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இளைஞர்களில் பலர் யாழ்.நகரில் கஸ்தூரியார் வீதிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சிறிய ரக வாகனம் ஒன்றில் வந்து இவர்கள் செம்மணியில் ஏ9 வீதியில் உப்பளப் பக்கம் இருந்து மறுபக்கமாகப் பாய்ந்த வெள்ள நீரில் அரைகுறை ஆடைகளுடன் நீராடியுள்ளனர்.

இவர்கள் தண்ணீரில் நின்ற படி வீதியில் சைக்கிளில் சென்ற யுவதிகளையும், பஸ்ஸில் சென்ற யுவதிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிவிக்க்படுகிறது. வாகனங்களின் குறுக்கே பாய்ந்தும் மறித்தும் காடைத்தனம் புரிந்ததாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

சில நேரங்களில் நிர்வானமாக இவர்கள் இருந்தமையால், வீதியால் சென்ற பெண்கள் என்ன செய்வது எனத் தெரியாது கலக்கத்துடன் தலை குனிந்தவாறு சென்றதனை அங்கு அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கும்பல் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டு பின்னர் வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளனர். இதேநேரம் இவர்களின் இந்த அநாகரிகச் செயலைக் கண்டு புத்திமதி சொல்லப்போன முதியவர் ஒருவர் அவமானப்பட்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல