புதன், 5 ஜனவரி, 2011

பிரித்தானியாவும் புலம்பெயர் தமிழர்களும் - விக்கிலீக்ஸ்

பிரித்தானிய தேர்தல் நடைபெற்ற காலத்தில் அங்கிருக்கும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் இலங்கையில் இடம்பெறும் யுத்தம் குறித்து தொடர்ச்சியாக பிரித்தானிய அரசிடம் முறைபாடுகளை செய்தமை மற்றும் தேர்தல் காலம் என்பவற்றை கருத்திற் கொண்டே பிரித்தானியா இலங்கை விடயத்தில் அதிகம் கரிசனைக் காட்டியதாக விக்கிலீக்ஸில் தகவல் கசிந்துள்ளது.

பிரித்தானிய தேர்தல் காலத்தில் புலம்பெயர் தமிழர்கள் பலர் அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விடயம் குறித்து பிரித்தானிய நிறுவனம் ஒன்றில் கடமைப் புரியும் இலங்கை புலம்பெயர் தமிழர்களின் வழிகாட்டி ஒருவர் அது குறித்து லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரி ஒருவர், பிரித்தானியா இலங்கை பிரச்சினையில் அதிகம் கரிசனை காட்டுவது தேர்தல் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் ஆர்பாட்டம் என்பவற்றாலேயே என அமெரிக்காவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல