புதன், 5 ஜனவரி, 2011

புதைக்கப்பட்ட ஆட்டை தோண்டி எடுத்தப்பின் காணோம்! யாழில் அதிசயம்

யாழ். புகையிரத நிலையத்திற்கு தென்புறமாக உள்ள வேலி இல்லாத காணியில் புதைக்கப்பட்ட ஆடு ஒன்று புதைக்கப்பட்ட சிறிது நேரத்தில் புதைகுழியில் இருந்து காணாமற் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புது வருட தினத்தன்று அந்த வீதியில் உள்ள உல்லாசப் பயண விடுதிக்கு மிக வேகமாக வந்த வாகனம் ஒன்று வீதி ஓரத்தில் நின்ற ஆட்டை முட்டி மோதிச் சென்றது. ஸ்தலத்திலேயே பலியான ஆட்டைத் தனது செலவில் ஆட்களைப் பிடித்து ஆட்டுச் சொந்தக்காரர் புதைத்துள்ளார்.

கன்று போடவிருந்த குறித்த ஆடு வயிற்றுக்குள் இருந்த குட்டிகளுடன் தோண்டி எடுக்கப்பட்டு காணாமல் போயுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சினையுள்ள மாடுகளைக் களவாடி வெட்டுவது, புதைத்த ஆடுகளைத் தோண்டி எடுத்துப் புசிப்பது போன்ற ஈனத்தனமான செயல்களை எங்கிருந்து எமது சமுதாயம் கற்றுக் கொண்டுள்ளதெனத் தெரியவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை ஆட்டின் சொந்தக்காரி விடுதி உரிமையாளர், வாகனச் சாரதி ஆகியோரிடம் முறையிட்டுப் புலம்பிய பொழுதும், அந்த ஆட்டைப் புதைப்பதற்கான செலவை ஏற்றுக் கொள்ளவோ நட்ட ஈடுவழங்கவோ மறுத்து விட்டதாகத் தெரிய வருகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல