புதன், 5 ஜனவரி, 2011

இறுதிக் கட்ட யுத்தத்தில் அமெரிக்கா இலங்கையை அச்சுறுத்தியது - விக்கிலீக்ஸ்

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கம் ஈரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுடன் ஆயுத கொள்வனவு தொடர்புகளைப் பேணிவந்ததால், ஐக்கிய அமெரிக்கா இலங்கைக்கு அச்சுறுத்தலாக விளங்கியதென விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை மேற்கோள்காட்டி நோர்வேயின் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான இலங்கை அரசாங்கத்தின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எரிகணைகள் உட்பட மேலும் பல இராணுவ ஆயுதங்களை ஈரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளிடம் இலங்கை கொள்வனவு செய்ததாக நோர்வேயில் வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு ஆயுத கொள்வனவில் ஈடுபடுவது ஐக்கிய நாடுகளின் திட்டங்களுக்கு எதிரானதெனக் கோரி அமெரிக்கா இலங்கையை அச்சுறுத்தியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த விடயம் குறித்து குறித்த காலப்பகுதியில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மௌனம் காத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இலங்கை, இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஈரான், பிரான்ஸ், இஸ்ரேல், ஜேர்மன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் உபகரணங்களையும் தமிழீழ விடுலைப் புலிகளுக்கு எதிராகப் பயன்படுத்தியதாக அந்த பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல