புதன், 5 ஜனவரி, 2011

மேற்கத்தைய கலாசாரத்திற்கு அடிமையான மகளை கொலைசெய்த தந்தை

மேற்கத்தைய கலாசாரத்திற்கு பெரிதும் அடிமையான தனது மகளை கொலைசெய்த தந்தை மீதான வழக்கு விசாரணை இம்மாதம் தொடங்குகின்றது.

50 வயதான பாலீ ஹசன் அல்மலேகி என்ற நபர் ஈராக்கிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவராவார்.

கடந்தவருடம் ஒக்டோபர் மாதமே இவர் ஜீப்பினால் தனது மகளான நூர் அல்மலேகியை மோதியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து சுமார் 2 வாரங்கள் கோமா நிலையில் இருந்த நூர் பின்னர் உயிரிழந்தார்.

தனது மகள் மேற்கிந்திய நாகரீகத்திற்கு பெரிதும் அடிமையானதாகவும் , அக்கலாசாரத்தினை பின்பற்றியமைக்காவே அவரை கொலை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவரது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமாயின் ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என என தெரிவிக்கப்படுகின்றது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல