செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

இலங்கைப் போர்க்குற்றவாளிகள் 73 பேர் பிரித்தானியாவில் தஞ்சம் - கார்டியன் செய்தியால் பரபரப்பு

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றச்சாட்டுக்களில் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் 73 பேர் பிரித்தானியாவில் இருப்பதாக கார்டியன் பத்திரிகை பரபரப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. வன்னியில் இடம்பெற்ற இறுதியுத்தத்தின் பின் விடுதலைப்புலிகள் அமைப்பு மீதும், மனித உரிமை அமைப்புக்களால் போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நிலையில் தற்போது இனங்காணப்பட்டுள்ள 73 இலங்கையைப் பின்னணியாகக் கொண்டவர்களில் தமிழ் இளைஞர்களும் உள்ளனரா என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.

எனினும் இவர்களில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படைத்தரப்பின் முக்கிய அதிகாரிகளும் இருக்கலாம் என்றே கருதப்படுகிறது. இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பிரித்தானியாவின் எல்லைப் பாதுகாப்பு நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலும், இவர்கள் தொடர்ந்தும் அங்கிருப்பதாக இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியக் குடிவரவுப் பிரிவைச் சேர்ந்த விசேட போர்க் குற்றப்பிரிவு கடந்த 5 வருட காலத்தில் சித்திரவதைகள், இனப்படுகொலைகள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் உட்பட ஏனைய போர் குற்றங்களில் சம்பந்தப்பட்ட 495 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்ததாகவும் இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல