செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

கரவெட்டியில் விபத்து குடும்பஸ்தர் மரணம்

கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற லொறி-துவிச்சக்கர வண்டி விபத் தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.நேற்றுப் பிற்பகல் ஒரு மணியளவில் இடம் பெற்ற இச்சம்பவத்தில் கரவெட்டி தெற்கைச் சேர்ந்த சின்னத்துரை துரைராசா (வயது 42) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரி ழந்தவராவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறியுடன் நெல்லியடியிலிருந்து கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு துவிச்சக்கர வண்டியில் வந்து கொண்டிருந்த குடும்பஸ்தர் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பலியானார். இதன் போது வேகக்கட்டுப் பாட் டை இழந்த லொறி கரவெட்டி பிரதேச செயலக மதிலையும் உடைத்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பான விசார ணைகளை மேற் கொண்ட பருத்தித்துறை நீதவான், உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக் காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் ஒப் படைக்குமாறு நெல்லியடிப் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல