செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

20 ஆண்டுகளாக மனைவியை சிறை வைத்த கணவர்!

பூட்டிய வீட்டுக்குள் 20 ஆண்டுகளாக கணவர் தனது மனைவியை சிறை வைத்திருந்தார். பிரேசில் நாட்டில் உள்ள பரானா மாகாணத்தில் உள்ள மரிலூஷ் நகரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு வீட்டில் பெண் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதை தொடர்ந்து போலீசார் அங்கு சென்றனர்.

நகரின் ஒதுக்கு புறத்தில் இருந்த அந்த வீடு பூட்டிக் கிடந்தது. எனவே, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு சுமார் 45 வயது மதிக்க தக்க பெண் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அந்த அறையில் தகவல் தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லை. வெளி உலகம் தெரியாத அளவுக்கு அவர் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தன்னை தனிமை சிறையில் அடைத்து வைத்தது தனது கணவர் என அவர் தெரிவித்தார். அவருக்கு 60 வயது இருக்கும். கடந்த 20 ஆண்டுகளாக தான் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினர். அவர் ஏன் இது போன்று அடைத்து வைக்கப்ட்டு சித்ரவதை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரிய வில்லை. அது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மீட்கப்பட்ட அப்பெண் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். எனவே, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். மேலும், மன நல நிபுணரிடமும் சிகிச்சை பெற்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல