செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

பேஸ்புக்கின் ஊடாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட இலங்கையர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன!

உலகின் முன்னணி சமூக வலையமைப்பு இணைய தளங்களில் ஒன்றான பேஸ் புக் இணைய தளத்தின் ஊடாக குற்றச் செயல்களில் ஈடுபட்ட இலங்கையர்களின் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

எவ்வாறெனினும், நீதிமன்றத்தின் உத்தரவு பெற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே இந்தத் தரவுகள் வெளியிடப்படும் என பேஸ் புக் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். பேஸ் புக் இணையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் தொடர்பிலான தரவுகளை வழங்குமாறு ஸ்ரீலங்கா கம்பூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பொன்ஸ் டீம் கோரிக்கை விடுத்திருந்தது.

பேஸ் இணையத்தை பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தொடர்பிலான தகவல்கள் திரட்டப்பட்டுள்ள போதிலும், அவற்றை வெளியிடுவதற்கு நீதிமன்றின் உத்தரவு அவசியம் என ஸ்ரீலங்கா கம்பூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பொன்ஸ் டீமின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஹன பல்லியகுறு தெரிவித்துள்ளார்.

தகவல்கள் களவாடப்பட்டதாகவும், அச்சுறுத்தப்பட்டதாகவும், கப்பம் கோரப்பட்டதாகவும் பலர் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சில கணக்குகளை ஏற்கனவே முடக்கியுள்ளதாக பேஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நீதிமன்றின் உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு புலனாய்வுப் பிரிவினரிடம் கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல