செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

இங்கிலாந்தில் இரண்டு தமிழ்ப பெண்கள் தீ வைத்து கொலை! பிரித்தானிய பெண் கைது!

இங்கிலாந்தில் இரண்டு இலங்கை பெண்கள் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தீ வைப்புச் சம்பவம் ஒன்றால் ஏற்பட்ட விபத்தில் இவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த வெள்ளிக் கிழமை இங்கிலாந்தின் எபன்கர் க்ரெவ் பிரதேசத்தில் உள்ள மெரின் என்ற தொடர்மாடி வீடமைப்பு தொகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 42 வயதான குணாழினி அழகரத்தினம், 59 வயதான சந்திராபதி தர்மலிங்கம் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

குணாழினி பிரித்தானியாவில் வசித்து வருவதுடன் அவரை பார்ப்பதற்காக சந்திராபதி தர்மலிங்கம் அங்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி காவற்துறையினர் சந்தேகத்தின் பேரில் 49 வயதான பிரித்தானிய பெண்ணொருவரை கைதுசெய்துள்ளனர். தீ வைக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தேக நபரான பெண் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல