யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை பெரியபுலம் மகாவித்தியாலையத்தின் ஆசிரியை ஒருவர் நேற்று மாணவர் ஒருவரால் கடுமையாயாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தலையிலும் முகத்திலும் காயங்களுக்கு உள்ளான ஆசிரியை சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளார்.
பாடசாலையில் இடம்பெற்ற சிரமதானப் பணியை மேற்பார்வை செய்து கொண்டிருந்த இந்த ஆசிரியையுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது மாணவன் ஆசிரியையை தாக்கியதாக பாடசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிரியையை தாக்கிய மாணவரைக் பொலிஸார் கைது செய்த போதும் அவர் அரசியற் செல்வாக்கின் பின்னணியில் விடுவிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை இந்த மாணவருக்கு எதிராக யாழ் கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முற்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக