கடந்த ஆகஸ்ட் மாதம் எம்.வி.சன்.சீ.கப்பலின் மூலம் ,கனடாவில் இலங்கை தமிழ் அகதிகளாக ஏற்குமாறு கோரி தஞ்சம் புகுந்த 492 பேரினால் கனேடிய அரசிற்கு 25 மில்லியன் டொலர்கள் செலவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைத் தமிழ் அகதிகளுடன் தாய்லாந்தில் இருந்து பயணித்த எம்.வீ.சன்.சீ.கப்பல் கனடா எல்லைப் பாதுகாப்பு முகவர்களினால் கரைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இவ்வாறு கரைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கப்பலில் இருந்த இலங்கை அகதிகள் 492 தமிழ் அகதிகளுக்கு ஏற்படும் செலவீனங்கள் கனடா எல்லைப் பாதுகாப்பு முகவர் நிலையத்தின் வரவு-செலவு திட்டத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 22 மில்லியன் டொலரினை மேலதிகமாக வழங்குமாறு கனேடிய அரசிடம் கனடா எல்லைப் பாதுகாப்பு முகவர் நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் ஒருசில அகதிகள் விடுவிக்கப்பட்ட போதும் பலர் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக டொரன்டோ சன் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக