வியாழன், 12 ஜனவரி, 2012

விண்டோஸ் இயங்குதளத்தை லாக் செய்வதற்கு

உங்களது கணணியை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள மிகச்சிறந்த வழி உங்களது இயங்குதளத்தை லாக் செய்வதே.
இவ்வாறு செய்யும் பட்சத்தில் உங்களது கணணியை எவராலும் உபயோகப்படுத்த முடியாது. கணணியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு காரணங்களால் கணணி அப்படியே வைத்துவிட்டு சென்று விடுவோம்.


ஆனால் ஒருசிலர் இதனை தவறாக பயன்படுத்திக் கொள்வர், நம் தகவல்களை திருடவோ அல்லது அல்லது நம் தகவல்களை அழிக்கவோ வாய்ப்பு உண்டு.

இது போன்ற சூழ்நிலையை சமாளிக்க இயங்குதளத்தை லாக் செய்து கொண்டால் பாதுகாப்பாக இருக்கும். இதற்கு WinLockPro என்ற மென்பொருள் உதவி புரிகிறது.

இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் ஒரு முறை கணணியை மறுதொடக்கம் செய்துவிட்டு WinLockPro மென்பொருளை ஒப்பன் செய்யவும்.

பின் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு சேமித்துக்கொள்ளவும். Select Background என்னும் பொத்தானை அழுத்தி வேண்டிய படத்தை தெரிவு செய்து கொள்ளவும்.

பின் Start on Windows startup என்னும் பொத்தானை அழுத்தி மீண்டும் கணணியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் வேண்டும் போது இந்த WinLockPro மென்பொருளை ஒப்பன் செய்து கொள்ளவும்.

கடவுச்சொல்லை உள்ளிட்டு பின் லொகின் செய்து திறந்து கொள்ள முடியும். இது பல்வேறு வகையில் நமக்கு உதவிடும்.

தரவிறக்க சுட்டி


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல