வியாழன், 12 ஜனவரி, 2012

MS Wordல் சொற்களின் எண்ணிக்கை அறிய

MS Word தொகுப்பில் நாம் அமைக்கும் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து அது எத்தனை எழுத்துக்களில் அமைந்துள்ளது என அறியலாம். ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் டாகுமெண்ட் அமைய வேண்டும் எனத் திட்டமிடுபவர்களுக்கு, குறிப்பாக பத்திரிக்கைகளில் கட்டுரை வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் எத்தனை சொற்கள் உள்ளன என்று கண்டறிய வேர்ட் கவுன்ட் என்ற வசதி தரப்பட்டுள்ளது.



முழு டாகுமெண்ட் அல்லது குறிப்பிட்ட பகுதி யினைத் தேர்ந்தெடுத்து, டூல்ஸ் மெனுவில் உள்ள வேர்ட் கவுண்ட் என்ற பிரிவில் கிளிக் செய்தால், எத்தனை சொற்கள் என்ற தகவலும், சில கூடுதல் தகவல்களும் கிடைக்கும்.

ஆனால் இந்த வேலை எதுவும் மேற்கொள்ளாமல், அந்த டாகுமெண்ட்டிலேயே எத்தனை சொற்கள் உள்ளன என்று வேர்ட் புரோகிராமைத் தானாகக் காட்டும்படி செய்திடலாம். நாம் எதனையும் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. நாம் எடிட் செய்து கொண்டிருந்தாலும், டாகுமெண்ட்டில் அமையும் சொற்களைப் பின்னணியில் எண்ணி, டாகுமெண்ட்டிலேயே நாம் குறிப்பிடும் இடத்தில் காட்டும். இதற்கான செட்டிங்ஸ் வேலையைப் பார்க்கலாம்.

1. நீங்கள் எங்கு இந்த சொற்கள் எண்ணிக்கை வேண்டுமோ, அந்த இடத்தில் கர்சரை வைத்திடவும்.

2. பின் கண்ட்ரோல் +எப்9 அழுத்தவும். இப்போது வளைவுக்குறி உள்ள அடைப்பு ஏற்படும். இந்த அடைப்புக் குறிகளுக்குள் NumWords என டைப் செய்திடவும்.

3. இனி மீண்டும் எப்9 அழுத்தினால், அடைப்புக் குறிகள் நீக்கப்பட்டு, உங்கள் டாகுமெண்ட்டில் உள்ள சொற்களின் எண்ணிக்கை காட்டப்படும்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல