மல்ட்டிமீடியா பிரிவில் அதிக இடம் எடுத்துக் கொள்ளும் பைல் வகை வீடியோ பைல் ஆகும். எனவே தான் குறிப்பிட்ட அளவில் அதனை அமைக்க விரும்புகிறோம்.
இதற்கு முதலில் உதவுவது விண் ஆர்.ஏ.ஆர். (Win RAR)மற்றும் விண் ஸிப் (Win Zip) ஆகும். இவை பைலைச் சுருக்கித் தர வெகு நேரம் எடுத்துக் கொண்டாலும், குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு வீடியோ பைலின் அளவு குறைவதில்லை.
இந்த வகையில் நமக்கு உதவுவது Freemake Video Converter ஆகும். இதனை http://www. freemake.com/free_video_converter/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் இருந்து பெறலாம். இதன் மூலம் 2.3 ஜிபி பைலை ஒருமுறை 420 எம்பி அளவிற்குக் குறைத்தேன்.
பைல் அளவு குறைக்கும் முயற்சியில் ஈடுபடுகையில், இந்த புரோகிராம் எந்த அளவிற்குக் குறைக்க முடியும் என்று அறிவிக்கும். அதற்கேற்ப செயல்படலாம். இந்த புரோகிராமினைத் தயாரித்து வழங்குபவர்கள், 40 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோவினை, இதனைப் பயன்படுத்தி டிவிடியில் பதிய முடியும் என்று அறிவித் துள்ளனர். 10.5 ஜிபி வீடியோ பைல் 4.5 ஜிபி வீடியோ பைலாகச் சுருக்கப்படுகிறது.
நீங்கள் உருவாக்கும் வீடியோ பைல்களை குறிப்பிட்ட அளவிற்குள், குறிப்பிட்ட நேரத்திற்குள் இயங்கும்படி அமைக்க மேற்குறிப்பிட்ட் வீடியோ கன்வர்டர் புரோகிராம் பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக