வியாழன், 12 ஜனவரி, 2012

யு-ட்யூப் விடீயோ பைல்களை நாம் விரும்பும் பார்மட்டில் டவுண் லோட் செய்திட

யு-ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ கிளிப்களை டவுண்லோட் செய்திட பல தளங்கள் இருந்தாலும், நீங்கள் கேட்டபடி, விரும்பிய பார்மட்டில் டவுண்லோட் செய்து பதியக் கூடிய வசதி சிலவற்றில் மட்டுமே உண்டு.



அதில் சிறந்த தளமாக நான் கருதுவது www.downloadtube.org என்ற முகவரியில் உள்ளது இந்த தளம். தேவையற்ற பார்மட்டுகள் எதுவும் இந்த தளம் தரும் ஆப்ஷன்களில் இல்லை. இதில் செயல்படுவதும் எளிது. இதன் இன்டர்பேஸ் இதற்கு உதவிடுகிறது. வழக்கம் போல, நீங்கள் டவுண்லோட் செய்திட விரும்பும், இணைய பக்கத்தின் முகவரியினை காப்பி செய்து, இந்த தளத்தில் இட வேண்டும்.

அடுத்த வசதி தான் கேக் மீது இடப்படும் சாக்லேட் கோலம் போல. இங்கு நீங்கள் விரும்பும் பார்மட்டில் அதனை டவுண்லோட் செய்திடலாம். வழக்கமாக யு-ட்யூப் தளத்தில் வீடியோ பைல்கள் எப்.எல்.வி. (‘FLV’) பார்மட்டில் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றை டவுண்லோட் செய்தவுடன், எப்.எல்.வி. பிளேயர் ஒன்றில் தான் இயக்க முடியும். ஆனால் இந்த தளத்தில் எம்பி4, உங்கள் போன், ஐ பாட் போன்றவற்றில் இயங்கும் வண்ணம் டவுண்லோட் செய்திடுகை யிலேயே மாற்றிப் பதிந்து கொள்ளலாம்.

முகவரி அமைத்து, தேவையான பார்மட் அமைத்தவுடன் Convert and Download என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து Download என்ற பட்டனில் கிளிக் செய்தவுடன், நீங்கள் விரும்பிய வீடியோ கிளிப்பிங் நிமிடங்களில் உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் தேர்ந்தெடுத்த பார்மட்டில் இருக்கும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல