செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

வேர்ட் 2007 தொகுப்பில் மாறா நிலையில் உள்ள எழுத்துருவினை மாற்ற

புதிதாக எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு ஒன்றுக்கு மாறியவுடன், அதனை நமக்கேற்ற வகையில் மாற்ற, இது போல சிறு மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியதிருக்கும்.

நீங்கள் விரும்பும், எப்போதும் பயன் படுத்தும் ஓர் எழுத்துருவினை, மாறா நிலையில் அமைக்க விரும்புகிறீர்கள், இல்லையா! புதிய வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் திறக்கவும். திரையில், இடது மேல்புறம் உள்ள மைக்ரோசாப்ட் ஆபீஸ் பட்டன் மீது கிளிக்கிடவும். புதிய டாகுமெண்ட் பிரிவு (Pane) ஒன்று கிடைக்கும். இதில் new மற்றும் அதன் பின்னர் blank document மீது கிளிக் செய்திடவும்.

இப்போது Font groupல் Font என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து, நீங்கள் விரும்பும் எழுத்துரு மற்றும் அது எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின்னர் Default என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது, புதிய டயலாக் பாக்ஸ் ஒன்று திறக்கப்படும்.

அதில், நீங்கள் அமைக்கவிருக்கும் புதிய டாகுமெண்ட்கள் அனைத்தையும் இந்த தேர்வு அமலாக்கப்படும் என்றும், இதனால் நார்மல் டெம்ப்ளேட் மாற்றப் படும் எனவும் அறிவிப்பு கிடைக்கும். ஓகே கிளிக் செய்து, மூடவும். இனி நீங்கள் விரும்பிய எழுத்துருவுடனே டாகுமெண்ட்கள் அமைக்கப்படும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல