கொரில்லா கிளாஸ் பயன்படுத்தப் பட்டுள்ளது என்ற குறிப்பு டேப்ளட் பிசி மற்றும் ஸ்மார்ட் போன்களைப் பற்றிப் படிக்கையில் காணப்படுகிறது. இந்த கிளாஸ் எதனைக் குறிக்கிறது?
கொரில்லா கிளாஸ் டேப்ளட் பிசிக்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களில் திரையாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு மில்லி மீட்டர் தடிமன் உள்ளது. தொடுதிரை தொழில்நுட்பத்திற்கு இது மிகவும் பயன்படுகிறது. இது மிகவும் கெட்டியாக இருப்பதுடன், இதில் ஸ்கிராட்ச் எதனையும் ஏற்படுத்த முடியாது.
அண்மையில் நடந்து முடிந்த உலக அளவிலான நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில், கார்னிங் நிறுவனம் கொரில்லா கிளாஸ் 2 என ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் தடிமன் 0.8 மிமீ மட்டுமே. தடிமன் குறைவதனால், இதனைப் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களும், டேப்ளட் பிசிக்களும் இன்னும் தடிமன் குறைவாக வடிவமைக்கப்படலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக