செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

நீரிழிவு நோயாளிகள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்

நீழிவு என்பது கால ஓட்டத்துடன் தீவிரமாகும் ஒரு நோய். காலம் செல்லச் செல்ல நோய் அதரிக்கும். அத்துடன் பல்வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இருதயம், சிறுநீரகம், நரம்புகள், என ஒவ்வொறு உறுப்புகளிலும் பாதிப்புகள் ஏற்படும். இவை வெளிப்படையாகத் தெரியாமல் உள்ளூர தீவிரமாகும்.

அதேபோல உயர் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களிலும் பாதிப்புகள் ஏற்படவே செய்யும்.இதில் முக்கியமான பாதிப்புகளில் ஒன்று சிறுநீரகத்தில் ஏற்படுவதாகும். நீழிவு உள்ளவராயின் அதை நீங்கள் பரிசோதித்துக் கண்டறிய வேண்டியது மிக முக்கியமாகும்.

அடிப்படைத் தகவல்கள்

சிறுநீரக நோய் பற்றிய சில அடிப்படைத் தகவல்களை அறிந்திருப்பது அவசியம்.

* சிறுநீரக நோய் ஆரம்ப நிலையில் எந்தவித வெளிப்படையான அறிகுறிகளையும் காட்டாது.

* காலம் செல்லச் செல்ல சிறுநீரக நோய் தீவிரமாகிக் கொண்டு போகும். இறுதியில் அது செயலிழக்கும் Kidney failure நிலை ஏற்படும். சிறுநீரக செயலிழப்பு மிகத் தீவிரமான நிலை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உடலில் சேரும் கழிவுப்பொருட்களை செயற்கையாகச் சுத்தம் (Dialysis) செய்யும் சிகிச்சையை தொடர்ந்து செய்ய நேரிடும். அல்லது சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை (Kidney transplant) செய்ய நேரும். இவை மிகுந்த தொல்லையானதும் பாரிய பொருட் செலவு மிக்கதுமாகும்.

* ஆயினும் சிறுநீரகப் பாதிப்பு இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதை சிகிச்சைகள் மூலம் குணமாக்க முடியும். அல்லது அது தீவிரமடைவதைத் தடுக்க முடியும் என்பது நம்பிக்கை தரும் செய்தியாகும். இச் சிகிச்சைகள் சிறுநீரகப் பாதிப்பை மட்டுமின்றி இருதயத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்க உதவும். ஆயினும், எவ்வளவு விரைவில் பாதிப்பைக் கண்டறிகிறீர்கள் என்பதில்தான் சிகிச்சையின் வெற்றி தங்கியுள்ளது என்பதை மறக்க வேண்டாம்.

சிறுநீரக நோய்களுக்கான வேறு முக்கிய காரணிகளும் உள்ளன. அவை உள்ளவர்களும் சிறுநீரகத்திற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

* இருதய நோயுள்ளவர்கள்
* தமது நெருங்கிய சொந்தங்களில் சிறுநீரக நோயுள்ளவர்கள்.

எத்தகைய பரிசோதனைகள்

1. இரத்தப் பரிசோதனை:. சிறுநீரகத்தின் வடிகட்டும் ஆற்றலைக் கண்டறியும் (glomerular filteration rate - GFR) பரிசோதனை செய்ய வேண்டும்.
சிறுநீரகத்தின தொழிற்பாடானது வடிகட்டுதல் ஆகும். மேலதிக நீரையும், குருதியில் சேர்ந்த கழிவுப் பொருட்களையும் அகற்றும். இச் செயற்பாடு எந்தளவு செயற்படுகிறது என்பதைக் காட்டும் பரிசோதனை இது.

2. சிறுநீரகப் பரிசோதனை: சிறுநீரில் அல்பியுமின் என்ற புரதம் வெளியேறுவது சிறுநீரக நோயில் ஏற்படும். சாதாரண சிறுநீர்ப் பரிசோதனையில் (Urine Full report - UFR) இதனைக் கண்டறிய முடியும். ஆயினும் ஆரம்ப நிலையில் மிகக் குறைந்தளவு புரதம் வெளியேறுவதை விசேட நுண்ணிய பசோதனைகள் மூலம் கண்டறியலாம். இதனை அறிய (Urine fo Microalbumin) என்ற பரிசோதனை செய்ய வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டியவை எவை?

நீரிழிவையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்க விடாது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.

* இரத்த சீனியின் அளவு Fasting blood Sugar எனில் 110 ற்குள் இருக்க வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு ஒரு றை செய்யப்படும் பரிசோதனை HbAlC எனில் 7இற்குள் கட்டுப்படுத்த வேணடும்.

* இரத்த அழுத்தத்தை 130/80 இற்குள் வைத்திருக்க வேண்டும்.

* உணவில் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும்.

* தேவையான இரத்த சிறுநீர்ப் பரிசோதனைகளை மருத்துவர் ஆலோசனையும் காலந்தவறாது செய்ய வேண்டும்.

* சிபாரிசு செய்யப்பட்ட மருந்துகளை தவறாது குறிப்பிட்ட நேரங்களில் உட்கொள்ள வேண்டும்.

டாக்டர்.எம்.கே.ருகானந்தன்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல