செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

பெயரை மாற்ற இயலுமா?

எக்ஸெல் புரோகிராமில் தயாரிக்கப் பட்ட ஒர்க்புக் ஒன்றினை, அதனைத் திறந்து பயன்படுத்துகையில் அதன் பெயரை மாற்ற இயலுமா?

எக்ஸெல் புரோகிராம் உள்ளாக, அதன் ஒர்க்புக் மற்றும் பிற பைல்களுக்கு பெயர்களை மாற்றக் கூடிய வசதி இல்லை. தயாரிக்கப்பட்ட ஒர்க்புக்கிற்கு புதியதாய் ஒரு பெயர் அளிக்கலாம். ஆனால் இரண்டு பெயர்களில் ஒரே ஒர்க்புக் கிடைக்கும். பெயர் மாற்றம் ஏற்படாது. எக்ஸெல் புரோகிராம் உள்ளாக பெயர் மாற்ற வேண்டும் எனில், எக்ஸெல் புரோகிராமினைத் திறந்து கொள்ளுங்கள். குறிப்பிட்ட பைலைத் திறக்க வேண்டாம். File மெனு திறக்கவும். இங்கு Open Dialogue Box ஆணிது திறக்கவும். இங்கு திறக்கப்படக் கூடிய ஒர்க்புக் பைல்கள் பட்டியலிடப்படும். இதில் நீங்கள் பெயர் மாற்ற விரும்பும் ஒர்க்புக் பைல் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். இப்போது அந்த ஒர்க்புக்கிற்கான Context மெனு கிடைக்கும். ஒர்க்புக்கின் பெயர் ஹைலைட் செய்திடப்பட்டிருக்கும். இங்கு அதன் பெயரை மாற்றி டைப் செய்திடவும். பெயர் மாறிய பின்னர் என்டர் தட்டவும். இப்போது திறந்திருக்கும் Open Dialogue Boxனை எஸ்கேப் அழுத்தி மூடவும். இனி உங்கள் ஒர்க்புக் மாற்றப்பட்ட பெயரிலேயே கிடைக்கும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல