செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

வேர்ட் டாகுமெண்ட்டில்.....

வேர்ட் டாகுமெண்ட்டில் அட்டவணைகளை அமைக்கையில், சில வேளைகளில் படுக்கை வரிசைகள் சில அடுத்த பக்கத்திற்குச் செல்கின்றன. அவ்வாறு செல்லாமல், எப்போதும் இணைந்த வகையிலேயே இருக்கும் படி அமைக்க....

வேர்டில் பொருள் பொதிந்த ஆவணங்களைத் தயாரிக்கையில், அட்டவணைகளையும் நாம் பயன்படுத்து கிறோம். இவை பிரிந்த நிலையில், இடையே பக்கங்களைப் பிரிக்கும் கோட்டுடன் அமைந்தால் பார்ப்பதற்கும், படிப்பதற்கும் சிரமமாகவே இருக்கும். இதனைத் தவிர்க்க கீழ்க்குறிப்பிட்ட வழிகளைக் கையாளவும். அட்டவணையில் அனைத்து படுக்கை வரிசைகளையும் தேர்ந்தெடுக்கவும். மெனு பாரில் Format மெனுவில் கிளிக் செய்து Paragraph என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். (வேர்ட் 2007 மற்றும் 2010ல் ரிப்பனில் ஹோம் டேப்பினை அழுத்தவும். இதில் வலது கீழ் பக்கம் உள்ள பாராகிராப் குரூப்பிற்கான சிறிய ஐகானில் கிளிக் செய்திடவும்.)
கிடைக்கும் பாராகிராப் விண்டோவில், Line and Page Breaks என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு உள்ள Keep Lines Together என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் இருப்பதனை உறுதி செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல