வெள்ளி, 23 மார்ச், 2012

பெல்ஜியம் நாட்டு சினிமா தயாரிப்பாளரும் அவரது காதலியும் தடுத்து வைப்பு

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த படத் தயாரிப்பாளர் ஒருவரையும் அவரது பிரான்ஸ் நாட்டு நண்பியையும் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் வீட்டுக் காவலில் (தடுத்து வைப்பு) வைத்துள்ளனர். என ராவய செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தின் பாதுகாப்பு ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் ராவய தெரிவித்துள்ளது.



இவர்களிடமிருந்து சில டி.வி.டி க்களையும் குற்றத்தடுப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவிக்கையில், இவர்கள் தொடர்பில் கிடைத்த தகவல் ஒன்றின் பெரிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர்களைக் கைது செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

– வர்மா
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல