வெள்ளி, 23 மார்ச், 2012

மூத்த அறிவிப்பாளர் ராஜேஸ்வரி சண்முகம் காலமானார்!

தமிழ் வானொலி அறிவிப்புத் துறையின் முன்னோடிகளில் ஒருவரான ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள் இன்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலையில் காலமானார்.

பழம் பெரும் அறிவிப்பாளரான இவர் காலமாகிய செய்தி கேட்டு இவரது ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.



ஒரு காலத்தில் வானொலி உலகையே ஆண்ட ராஜேஸ்வரி சண்முகம் என்ற இந்தப் பெயர் இலங்கையில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் நன்றாக பரிச்சயமானது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சுமார் அரை நூற்றாண்டுகளாகப் பணியாற்றி நேயர்களை தன் அன்புக் குரலால் கட்டிப் போட்டவர்.வானொலிக் குயில் என்றே இவர் எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படுவார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல