தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விமானப் படைப் பிரிவு குறித்த சுவாரஷிய தகவல்களை கொண்ட பதிவு இது.
உலகிலேயே முதன்முதல் விமானப் படையை கொண்டிருந்த போராட்ட அமைப்பு புலிகள்தான்.
விமானத்தை கட்டுகின்றமை தொடர்பாக 1985, 1986 காலப் பகுதிகளில் இருந்து புலிகள் முயற்சித்து வந்திருக்கின்றனர்.
வான் புலிகள் தொடர்பான முதலாவது உத்தியோகபூர்வ அறிக்கை 1998 ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில் பிரபாகரன் வெளியிட்டு இருந்தார்ர்.
வான்புலிகளுக்கு சொந்தமான விமானத்தில் இருந்து அப்போது பூக்கள் தூவப்பட்டன.
2000 ஆம் ஆண்டை வான் புலிகளின் ஆண்டு என்று புலிகள் அறிவித்தார்கள்.
சங்கர் அல்லது வித்தியாலிங்கம் சொர்ணலிங்கம் என்பவர்தான் வான்புலிகள் பிரிவின் ஸ்தாபக தலைவர். 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொல்லப்பட்டார். அது வரை வான்புலிகள் பிரிவு சங்கரின் பொறுப்பில் விடப்பட்டு இருந்தது.
புலிகளின் இரணைமடு விமான ஓடுபாதை குறித்து 2005 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி இலங்கை இராணுவம் அறிக்கை இட்டது.
பலாலி விமானத் தளத்தை வான் புலிகள் தாக்கக் கூடும் என்று 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11 ஆம் திகதி ஊடகங்களில் ஊகங்கள் வெளியிடப்பட்டன.
வான் புலிகளின் அதிகாரபூர்வமான முதலாவது விமானத் தாக்குதல் 2001 ஆம் ஆண்டு யூலை 24 ஆம் திகதி கட்டுநாயக்க படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதலை வான் புலிகள் மேற்கொண்டு இருந்தனர் என புலிகள் பிரகடனப்படுத்தி இருந்தனர்.
2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி பலாலி விமானப் படைத் தளம் மீது புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
தென்னிலங்கையில் கொலன்னாவ, கெரவலப்பிட்டி ஆகிய இடங்களில் இருந்த எண்ணெய்க் குதங்கள் மீது புலிகளின் விமானங்களால் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி குண்டுகள் வீசப்பட்டன.
2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி அனுராதபுரம் விமான படைத் தளம் மீது புலிகளால் எல்லாளன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது புலிகளின் விமானங்களும் குண்டு வீச்சுத் தாக்குதல்களை நடத்தின.
புலிகளிடம் 2-5 இலகுதர விமானங்கள் இருந்து இருக்க வேண்டும். இவை செக் நாட்டு இசட் 143 ரக விமானங்களாக இருக்க வேண்டும் என இலங்கைப் படைத் தரப்பு நம்புகின்றது.
விமானங்களின் சில இணைப்புப் பாகங்கள், விமானிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் இலத்திரனியல் குண்டு செலுத்தி, குண்டுகள் ஆகியன புலிகளின் உள்ளூர்த் தயாரிப்புக்கள்.
புலிகளால் கட்டுநாயக்க மீது நான்கு குண்டுகள் வீசப்பட்டன. ஆனால் மூன்றுதான் வெடித்தன. வெடிக்காத குண்டை வைத்து இலங்கை இராணுவத்தின் நிபுணர்கள் ஆராய்ந்தனர். இது பல நூற்றுக் கணக்கான உருளைகள் கொண்ட உருக்குக் குண்டு என்றும் புலிகளே இவ்வகை குண்டுகளை தயாரித்து உள்ளனர் என்றும் இந்நிபுணர்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து புலனாய்வு ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார்.
வான் புலிகளின் முதலாவது தளபதியான சங்கர் சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிக்ஸ் பிரிவில் பட்டப் படிப்பு படித்து இருக்கின்றார். இவர் பின்பு கனடா நாட்டுக்கு சென்று எயர் கனடா விமான நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் கடமை ஆற்றி இருக்கின்றார்.
பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் ஓட்டுனர் பயிற்சிகளை புலிகள் பெற்று இருக்கக் கூடும் என்று இக்பால் அதாஸ் தெரிவித்து உள்ளார்.
இதே நேரம் மலேசியாவில் தமிழர் ஒருவருக்கு விமானப் பராமரிப்புப் பயிற்சி கல்லூரி ஒன்று உள்ளது. புலிகள் இங்கு பயிற்சிகளை பெற்றிருக்கலாம் என்றும் ஊகங்கள் வெளிப்படுத்தப்பட்டு இருந்தன.
எரித்திரியாவில் இருந்து வருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்களைத்தான் புலிகள் முதலில் வானத்தில் பறக்க விட்டு இருந்தனர். இச்சம்பிரதாய வைபவத்தை தலைவர் பிரபாகரன் முன்னின்று நடத்தி இருக்கின்றார். பொட்டு அம்மான், தமிழ்ச்செல்வன் ஆகியோர் இவ்விமானங்களில் அமர்ந்து இருந்து, பறந்து பார்த்தனர்.
ஆனால் உயிரச்சம் காரணமாக இவ்விமானங்களில் பறக்கின்றமையை பிரபாகரன் தவிர்த்துக் கொண்டார். இறுதி வரை இவர் புலி விமானங்களில் பயணிக்கவே இல்லை.
இவ்விமானங்கள் தாக்குதலுக்கு ஏற்ற வகையில் பின்பு மாற்றியமைக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக