வியாழன், 15 நவம்பர், 2012

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி-4

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் ஊடகங்கள் மீது கோபம் கொண்டிருந்த போதிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அதன் தலைமையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு விடயமும் யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகம் ஒன்றினால் ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நல்லுறவைப் பேணிக்கொண்டிருந்த காலப்பகுதியில் அன்ரன் பாலசிங்கம் இறப்பதற்கு முன்னர் அன்ரன் பாலசிங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள மூன்று ஊடகவியலாளர்கள் வன்னிக்கு பிரபாகரனால் அழைக்கப்பட்டனர். இவர்களுள் வித்தியாதரன் முதன்மையானவராக அந்த நாட்களில் விடுதலைப் புலிகளால் கருதப்பட்டிருந்தார். வித்தியா தரனுடனான சந்திப்புக்களுக்குரிய ஏற்பாடுகளை லண்டனில் இருந்தவாறு அன்ரன் பாலசிங்கம் ஒழுங்குபடுத்தி இருந்தார்.

இவ் ஒழுங்குபடுத்தலின் பிரகாரம் வன்னிப்பகுதிக்கு வந்த வித்தியாதரன் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை அவரது மறைவிடமொன்றில் சந்திப்பதற்குரிய ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட் டிருந்தன. வழமையாக விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் யாராவது வெளியாட்கள் சந்திப்புக்களை மேற்கொள்வதாக இருந்தால் அச்சந்திப் புக்களில் பொட்டம்மான் தவறாமல் கலந்து கொள்வார். ஆனால் வித்தியாதரன் தொடர்பில் ஏற்கனவே அச்சம் கொண்டிருந்த பொட்டம்மான், தலைவரை வித்தியாதரன் சந்தித்த பொழுது அச்சந்திப்பில் கலந்து கொள்வதை தவிர்த்துக்கொண்டார். சந்திப்பின் முடிவில் மட் டும் பொட்டம்மான் இருவரும் சந்தித்த இடத்திற்கு வருகை தந்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் மறைவிடமான முகாம்களில் ஒன்றாகக் கருதப்பட்ட வட்டக்கச்சி பகுதியிலுள்ள பிரத்தியேகமான இடமொன்றிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பு இடம்பெற்ற வேளையில் பொட்டம்மான் கிளிநொச்சியிலுள்ள விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் இரண்டாம் நிலை பொறுப்பாளர் என்று கூறப்படுகின்ற கபிலம்மானுடன் கிளிநொச்சி பொதுவிளையாட்டு மைதானத்திற்கு முன்பாக இருந்த முகாமில் சந்திப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இச்சந்திப்பின் போது வித்தியாதரனின் தலைவர் உடனான சந்திப்பின் பின்னர் ஏற்படப்போகும் பாதக நிலைமைகள் தொடர்பில் கபிலம்மானிடம் மனம்விட்டுப் பேசியிருந்தார். இதன் பின்னர் தலைவரைச் சந்தித்த பொட்டம்மான் நான் ஏற்கனவே உங்களிடம் கூறியது போன்று நீங்கள் நரகத்து முள்ளை எங்களது பகுதிக்குள் அழைத்து சந்தித்திருக்கிறீர்கள். எனக்கு இச்சந்திப்பில் பயம் இருக்கிறது. இதனாலேயே இச்சந்திப்பை நான் தவிர்த்துக்கொண்டேன் எனத் தெரிவித்தார்.

பொட்டம்மான் எதிர்பார்த்தது போன்று சந்திப்பு இடம்பெற்று மறுநாள் வித்தியாதரன் யாழ்ப்பாணம் வந்தவுடன் உடனடியாக செய்த வேலை விடுதலைப் புலிகளை கடுமையாக கோபமடைய வைத்தது. தலைவருடன் பிரத்தியேகமாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை யும் தலைவர் வித்தியாதரன் கொடுத்ததற்கிணங்க மறுக்க முடியாமல் மேலோட்டமாக பார்த்த உதயன் மற்றும் சுடரொளி போன்ற பத்திரிகைகளை தலைவர் பார்த்தபொழுது அதை வேண்டுமென்றே படமெடுத்த வித்தியாதரன் அப் படங்களை கூடுதலான மிகைப்படுத்தலுடன் தலைவருக்குப் பிடித்தது சுடரொளியும், உதயனும் மட்டுமே என பத்திரிகையில் படத்தையும் செய்தியையும் போட்டமையானது விடுதலைப்புலிகளின் தலைவரை கோபமடைய வைத்தது. ஏனெனில் வித்தியாதரனைச் சந்திக்கின்றபொழுது இச் சந்திப்புத் தொடர்பில் ஊடகங்களில் எந்தவொரு செய்தியையும் வெளியிடக் கூடாது எனவும் இங்கு எடுக்கப்படுகின்ற புகைப்படங்கள் எதனையும் பிரசுரிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடனுமே சந்திப்பு இடம்பெற்றது. இருந்த போதிலும், வித்தியாதரன் அனைத்தையும் மீறி தன்னிச்சையாக இப்புகைப்படங்களை வெளியிட்டமையானது விடுதலைப் புலிகளிற்கு வித்தியாதரன்சவால் விடுக்கிறாரா என்ற கேள்வியை புலிகள் இயக்க தளபதிகளிடம் எழுப்பியதுடன்,தலைமைக்குக் கடுஞ் சினத்தையும் மூட்டியது.

மிக நெருங்கிய ஆதரவு ஊடகவியலாளர்களிடமிருந்து விடுதலைப்புலிகளின் தலை மைக்குப் பல்வேறு நெருக்குதல்கள் வர ஆரம்பித்தது. யாழ்ப்பாணம், கொழும்பு, வெளிநாடுகள் என்பனவற்றிலிருந்து புலிகள் இயக்க ஆதரவு ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர்களிடம் உங்களுக்குப் பிடித்தது உதயனும் சுடரொளியும் மட்டுமென்றால் நாங்கள் ஏன் உங்களுக்காக செயற்பட வேண்டும்? ஏன் பக்கச்சார்பாக செயற்படுகிறீர்கள்? என்ற தோரணையில் தொடர்ச்சியாக கேள்விக் கணைகளை விடுத்தனர். இதனை அடுத்து பொட்டம் மான், கபிலம்மான், கஸ்ரோ, சூசை போன்ற தளபதிகளுடன் விடுதலைப்புலிகளின் தலைவர் நடத்திய சந்திப் பொன்றின்போது நீங்கள் கூறிய போது நான் அதை பெரிதாக எடுக்கவில்லை. ஆனால் வித்தியாரனின் செயற்பாடு எங்களுக்கு ஆப்படிக்கும் விதத்தில் அமைந்துள்ளதை இப்பொழுதுதான் உணர்கிறேன் எனக் கூறியதுடன் வித்தியா தரனை மீண்டும் தலைவர்

சந்திக்கப் போவதாக அழைத்து நடவடிக்கை எடுங்கள் என பொட்டம்மான் பணிக்கப்பட்டார். இதனை அடுத்து வன்னிக்கு அழைக் கப்பட்ட வித்தியாதரன் உடனடியாக பங்கரில் இடப் பட்டதுடன் மறுநாள் 9கோடி ரூபா நிதியை தமிழேந்தியிடம் கட்டிவிட்டு வன்னியை விட்டு செல்லுமாறு பணிக் கப்பட்டார்.

இதன் பிரகாரம் நிதி கட்டப்பட்டதன் பின்னரே வித்தியாதரன் வன்னியை விட்டு வெளியேற அனு மதிக்கப்பட்டார். இவ்வாறு

விடுதலைப் புலிகளை அழிக்கும் விதத்தில் செய்திகளை ஊடகங்கள் திரிபுபடுத்தி வெளியிட் டமையானது அதன் முள்ளிவாய்க்கால் முடிவுகள் வரை தொடர்ந்த வண்ணமே இருந்தது. இதற்கு விடுதலைப் புலிகளும் ஒரு விதத்தில் காரணமாக இருந்தனர். இது தொடர்பில் ஆரம்ப நாட்களில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் கவிஞர்களில் ஒரு வராக இருந்த புதுவை இரத்தினதுரை என்பவர் (முருகனுக்கு நிகரானவன் பிரபாகரன்) என்ற பாடலை இயற்றிப் பாடியபொழுது இப்பாடல் கூடுதலான மெருகூட்டலுடன் காணப்படுகிறது என விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலிகளின் குரல் நிறுவனத்திற்கு பொறுப்பாக இருந்த ஜவான் என்பவரால் தலைவரிடம் கூறப்பட்ட பொழுது தலைவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன் புது வையை அழைத்து குளிரூட்டப்பட்ட வாகன மொன்றை வழங்கியமையானது விடுதலைப்புலிகளும் ஒரு கட்டத்தில் தங்கள் தொடர்பிலான மெருகூட்டல்களை விரும்பியிருந்தனர் என்பதற்கான அடையாளமாகவே இருந்தது.

ஆனால் மெருகூட்டல்களும் மிகைப்படுத்தல்களும் தங்களை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு வந்து விடும் என விடுதலைப் புலிகள் எண்ணியிருக்கவில்லை. விடுதலைப் புலிகளின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் ஊடகங்கள் எந்தளவு தூரம் பங்களித்தனவோ அந்தளவு தூரம் அவர்களது தோல்விக்கும் வீழ்ச்சிக்கும் ஊடகங்களே காரணமாக இருந்தனர். விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரசாரத்திற்கு ஊடகங்கள் பெரியளவில் பங்களித்திருந்த போதிலும், உள்நாட்டில் ஊடகங்களின் போக்கு அவர்களின் வீழ்ச்சிக்கு அத்திவாரம் இட்டது எனலாம்.

விடுதலைப்புலிகள் தமது வருடாந்த நிதி ஒதுக்கீடுகளில் தங்களது ஊடகச் செயற்பாட்டுக்கே ஆயுதக் கொள்வனவுக்கு அடுத்த கட்டமாக நிதி ஒதுக்கீடுகளை செய்து வந்தனர். குறிப்பாக விடுதலைப் புலிகளின் இணையத் தளங்களில் ஒன்றான தமிழ்நெற் எனும் இணையத்தளம் பல கோடி ரூபா செலவில் இயக்கப்பட்டுவந்தது. ஊடக வியலாளர் சிவராம் (தராகி) என்பவர் தமிழ்நெற் எனும் இணையத்தளத்தை பொட்டம் மானின் ஆலோசனைக்கும் அவரது செயற்றிட்டத்திற்கும் இணங்கவே இயக்கி வந்தார். இதற்கென பொட்டம்மான் இவரிற்கு ஒவ்வொரு மாதமும் 5 இலட்சம் ரூபா வீதம் நிதிஒதுக்கீடு செய்து வந்தார். இந்த நிதியில் 5 ஊடகவியலாளர்களிற்கு மாதாந்தம் நாற்பதாயிரம் ரூபா வீதம் சிவராமால் வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் ஜெயானந்தமூர்த்தி என்பவரிற்கும் இரா.துரைரத்தினம் என்பவரிற்கும் கொழும்பில் புத்திகவீரசிங்க என்பவரிற்கும் யாழ்ப்பாணத்தில் தவச்செல்வம், தயாபரன் ஆகியோரிற்கும் இந்த நிதி மாதாந்தம் வழங்கப்பட்டு வந்தது. இவ்வாறு திருகோணமலையிலும் ஒரு ஊடகவியலாளரிற்கு நேரடியாக புலிகளால் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. அந்த ஊடக வியலாளர் யார்? அவர்கள் தொடர்ந்து புலிகளை எவ்வாறு அழித்தனர்? என்பது தொடர்பில் தொடர்ந்து பார்ப்போம்.

வே.அர்ச்சுணன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல