விடுதலைப் புலிகள் இயக்கம் தமது கொள்கைகள், கோட்பாடுகள் என்பனவற்றில் திருகோணமலை நகரிற்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோன்று அடிக்கடி சிறிய சிறிய செயற்பாடுகளில் வெளிப்படுத்தி வந்தனர். குறிப்பாக தமிழ் மக்களிடத்திலும் சர்வதேச அரங்கிலும் தங்களால் அமைக்கப்படும் தமிழீழத்தின் தலைநகரமாக திருகோணமலையே விளங்குமென கூறிவந்தனர். ஆனால் நடைமுறையில் கிழக்கு மாகாணத்தை விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் தொடர்ச்சியாக புறக்கணித்து வருவதாகவும், குறிப்பாக யாழ் மாவட்டத்திற்கே விடுதலைப்புலிகள் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அந்த நாட்களில் விடுதலைப்புலிகளின் கிழக்குமாகாணத் தளபதிகள் தங்களுக்குள் குறைப்பட்டுக்கொண்டனர்.
குறிப்பாக திருகோணமலை உள்ளடங்கலாக வன்னி மாவட்டம் முழுவதற்கும் மாத்தையா பொறுப்பாக இருந்த காலப்பகுதியில் மாத்தையா குறூப் என்றாலே படைத்தரப்பிற்கு ஒரு பயம் இருந்தது. விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை விட மாத்தையாவிற்கே வன்னி மற்றும் கிழக்கு மாகாண போராளிகள் முக்கியத்துவம் கொடுத்தனர். இதன் நிலைமைகளை விளங்கியோ என்னவோ பின் நாட்களில் மாத்தையாவிற்கும் பிரபாகரனிற்குமிடையில் முறுகல் நிலைகள் உருவாகத் தொடங்கியது. இதன் முக்கிய அம்சமாக மாத்தையா கிழக்கு மாகாணப் போராளிகளின் நலன்களிற்காக அடிக்கடி தலைமையுடன் முரண்பட்டதாகவும் ஆனால் தலைமை மாத்தையாவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள மறுத்ததாலேயே மாத்தையா தன்னிச்சையாக இயக்கத்தின் தலைவராக தான் வரவேண்டுமெனும் எண்ணத்துடன் இந்திய புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புகளை ஏற்படுத்தி பிரபாகரனை போட்டுத்தள்ளும் திட்டம் வகுக்கப்பட்டது. இருந்தபோதிலும் விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவு பொறுப்பாளரான பொட்டம்மான் இவருடைய சதித்திட்டத்தை முன்னரே உணர்ந்துகொண்டதால் மாத்தையா பொட்டம்மானால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
இதன்பின்னர், மாத்தையாவின் விசாரணை அறிக்கை தலைவரிடம் கையளிக்கப்பட்டு தலைவர் பிரபாகரன் அந்த விசாரணை அறிக்கையை பார்வையிட்ட பின்னர் சாவகச்சேரியிலுள்ள சங்கத்தானைப் பகுதியிலுள்ள மறைவிடம் ஒன்றில் இருந்தவாறு மாத்தையாவை போட்டுத்தள்ளுமாறு உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து கண்கள் கட்டப்பட்ட நிலையில் தலைவரிடம் மாத்தையா கொண்டுவந்து காட்டப்பட்டு அதன்பின்னர் மாத்தையாவுடன் இணைந்து இந்த சதித்திட்டத்தில் பங்கெடுத்த பல போராளிகள் ஒன்றாக சுடப்பட்டு இரவோடு இரவாக எரியூட்டப்பட்டனர்.
குறித்த போராளிகளிற்கும் மாத்தையாவிற்கும் விசாரணைகள் இடம்பெறுவதாக புலிகளால் கூறப்பட்ட போதிலும் மாத்தையாவிற்கு தங்களால் மரண தண்டனை வழங்கப்பட்ட விடயத்தை பல நாட்களாக புலிகள் மறைத்தே வந்தனர். இந்த விடயம் தொடர்பில் தமிழ் ஊடகங்களும் மௌனம் காத்தே வந்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதித்தலைவராக செயற்பட்ட மாத்தையாவிற்கு நடந்த சம்பவம் தொடர்பில் அனைவரும் வாயடைத்து நின்றனர். எவருமே தட்டிக்கேட்க துணிவின்றி நின்றதுடன் தமிழ் ஊடகங்கள் துரோகி பட்டம் வழங்கி இக்கொலைகளை நியாயப்படுத்தின.
இவ்வாறு நீண்ட காலத்திற்குப் பின்னர் கிழக்கு மாகாண தளபதியாகவும், விடுதலைப் புலிகளின் சண்டைக் களங்களில் ஒரு ஹீரோவாகவும் செயற்பட்டு வந்த கருணா என்றழைக்கப்படும் முரளிதரன் என்பவரிற்கு எதிராக விடுதலைப் புலிகளால் குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட்டு அவர் தண்டனைக்கு உள்ளாக்கப்பட இருந்த தருணத்தில், பொட்டம்மானிடம் இருந்து தப்பித்து அரச படைகளிடம் சரணடைந்து அரசுடன் இணைந்த செயற்பாட்டிற்கு தன்னை உடனடியாக ஈடுபடுத்திக் கொண்டார். கருணா என்ற இந்தப் புலிகளின் மூத்த தளபதி கிழக்கு மாகாண போராளிகளிற்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் நிதிமுதல் நிர்வாகம் வரை சீராக கிழக்கு மாகாணத்திற்கு பகிரப்படவில்லை என்ற தோரணையிலேயே தலைமையுடன் முரண்பட்டு வந்தார். இவரின் கோரிக்கைள் ஏற்கப்பட்டு தலைமை இவரையும் அரவணைத்துச் சென்றிருந்தால் முள்ளிவாய்க்கால் முடிவுகள் கூட ஏற்பட்டிருக்காது என கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பலரும் தற்போதும் கூறி வருகின்றனர்.
எது எப்படியோ எல்லாம் நடந்து முடிந்து விட்டது. இவ்வாறு கிழக்கு மாகாணம் தொடர்பில் பாரபட்சமான போக்கை விடுதலைப் புலிகள் கையாண்ட போதிலும் ஊடகத் துறையில் கிழக்கு மாகாணத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர்மட்டும் புலிகளுடன் இணந்து செயற்பட்டதால் அவர்களுக்கு கூடுதலான சலுகைகளையும் பணத்தினையும் வழங்கி புலிகள் தங்களது கைக்குள் அவர்களைப் போட்டுக்கொண்டனர். ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் தமிழ்நெற் என்ற இணையத்தளத்திற்கு புலிகள் பயன்படுத்தியவர்கள் தொடர்பில் நாங்கள் பார்த்த போதிலும் அவர்களது படைத்துறை சார்ந்த செயற்பாடுகளை ஆராய்வதற்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் பார்க்கலாம். இரா.துரைரத்தினம், ஐ.நடேசன், சண்தவராசா, ஜெயானந்தமூர்த்தி போன்றோர் மட்டக்களப்பை தளமாகக் கொண்டு புலிகளின் ஊடகங்களிற்காக செயற்பட்டு வந்தனர்.
ஆனால் தமிழ்நெற் என்ற இணையத்தளத்திற்காக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் இருந்து செயற்பட்டு மாதாந்தம் புலிகளிடம் ஒரு இலட்சம் ரூபா சம்பளமாக பெற்றுவந்த குருநாதன் என்பவரே தமிழ்நெற்றின் உயிர் நாடியாக இலங்கையில் செயற்பட்டு வந்தார். குருநாதன் என்பவர் சிவராமால் வழிநடத்தப்பட்ட போதிலும் இவரை பொட்டம்மானின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவராக நோர்வேயில் இருந்து செயற்பட்டு வரும் ஜெயா என்பவரே நேரடியாக இயக்கி வந்தார். இவருடன் இணைந்து சிறி என்றழைக்கப்படும் தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் புலிகள் இயக்கத்தின் தலைவரின் நம்பிக்கைக்குரிய ஒருவரான யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த சிறிதரன் என்ற சிறியே இவருடன் தொடர்புகளைப் பேணி நிதியுதவிகளை செய்துவந்தார். குறிப்பாக தமிழ்நெற் இணையத்தளத்திற்குரிய செய்திகளை வழங்குவதுடன் மட்டும் நிற்காமல் கிழக்கு மாகாணத்தில் படையினரது செயற்பாடுகள் களநிலவரங்கள் படையினரது நகர்வுகள் போன்ற புலனாய்வுத் தகவல்களையும் இவர் குறித்த இருவரிற்கு ஊடாகவும் பொட்டம்மானிற்கு பரிமாறி வந்தார்.
ஊடகம் என்ற போர்வையில் ஊடகப்பணிகளில் மட்டும் நிற்காமல் புலிகளின் படைத்துறை சார்ந்த செயற்பாடுகளிற்கும் இவர் துணைபுரிந்து வந்தார். இத்தகைய செயற்பாடானது சில நேரங்களில் சாதகமாக இருந்தாலும் கூட சில நேரங்களில் பாதகமாகவும் இருந்ததுண்டு. கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் இருந்து செயற்பட்ட புலிகள் இயக்கத்தின் ஆதரவு ஊடகவியலாளர்கள் அனைவருமே நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். இவர்களில் எவருமே மட்டக்களப்பில் இருந்து தங்களது செயற்பாடுகளை தற்போது மேற்கொள்ளவில்லை. அனைவரும் சுவிஸ் நாட்டில் தற்போது தஞ்சம் கோரிய நிலையில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை உசுப்பேற்றும் நோக்குடன் தங்களது ஊடகத்துறை சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் தங்களது இருப்பினை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டுமாக இருந்தால் கூடுதலான மிகைப்படுத்தலான செய்திகளை வழங்கவேண்டிய தேவை இவர்களுக்கு உள்ளது. ஏனெனில் குழப்பமான சூழ்நிலையில் தொடர்ந்து மக்களை வைத்திருந்தால் மட்டுமே இவர்களால் ஊடகத்துறையில் சம்பாதிக்க முடியும். புலம்பெயர் நாடுகளில் இவர்களுக்கு உதவுவதற்கென புலிகளால் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டு உதவித் தொகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
அது ஒருபுறமிருக்க, ஊடகவியலாளராக புலிகளுடன் கரம்கோர்த்து இறுதிநாட்களில் புலிகளின் அழிவிற்கு ஏதோ ஒரு வகையில் வழிகோலியவர்களுள் ஒருவராகக் கூறப்படும் உதயன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் திடீரென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சீனாவிற்குச் சென்றிருப்பதாக ஊடகங்கள் முதன்மைப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன. பல்வேறு ஊகங்களும் இதன் பின்னணியில் பேசப்படுகின்றன. விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்களின் வரலாற்றைப் பார்த்துக்கொண்டிருக்கின்ற நாம் கூட்டமைப்பை உடைக்கின்ற சதித்திட்டத்தில் வித்தியாதரன் தற்போது ஈடுபட்டுள்ளதை பார்த்துவிட்டு விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்களின் வரலாற்றைத் தொடர்ந்து பார்ப்பதே பொருத்தமானதாக இருக்கும்.
வே.அர்ச்சுணன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக