ஞாயிறு, 28 ஜூலை, 2013

விண்டோஸ் 7 ல் தனிதனியே யூசர் அக்கவுண்ட் தொடங்குவது எப்படி ?????

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், யூசர் அக்கவுண்ட்களை உருவாக்க எளிதான வழிகளைத் தருகிறது. இதன் மூலம், ஒரு பயனாளர், எந்த பைல்கள் மற்றும் போல்டர்களைப் பயன்படுத்தலாம் என்று வரையறை செய்து விண்டோஸ் சிஸ்டத்திற்குச் சொல்கிறது. ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரில், ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்களை உருவாக்கலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், எப்படி இவற்றை உருவாக்கலாம் என்பதனை இங்கு பார்க்கலாம்.

1. ஸ்டார்ட் மெனுவிலிருந்து Control Panel ஐத் திறக்கவும்.

2. இதில் User Accounts என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உங்கள் கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருந்தால், Give other users access to this computer என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இல்லை எனில், Manage another account என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

3. நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டிருந்தால், ஏற்கனவே அந்த நெட்வொர்க்கில், அல்லது பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள அக்கவுண்ட்கள் காட்டப்படும். இங்கு Add என்பதில் கிளிக் செய்திடவும். உடன் யூசர் நேம் (User Name) ஒன்று தரும்படி நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். அத்துடன் டொமைன் பெயரும் தர வேண்டியதிருக்கும். அத்துடன், புதிய யூசருக்கு Standard account அல்லது Administrator account ஆகியவற்றில் எந்த அக்கவுண்ட் உரிமை தர இருக்கிறீர்கள் என்பதனைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அடுத்து Finish என்பதனை அழுத்தவும்.

4. உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் தனியாக வைத்துப் பயன்படுத்தக் கூடியதான இயக்கத்தில் இருந்தால், யூசர் நேம் மட்டும் தர வேண்டியதிருக்கும். உடன் எத்தகைய தன்மை உடைய அக்கவுண்ட் என்பதனையும் குறிப்பிட வேண்டும். அதன் பின்னர், Create Account என்பதில் அழுத்தவும்.

5. யூசர் அக்கவுண்ட்டுக்கு பாஸ்வேர்ட் தேவை இல்லை எனில், மைக்ரோசாப்ட், நீங்கள் அதனை உருவாக்கி வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறது. குறிப்பிட்ட கம்ப்யூட்டரில் லாக் இன் செய்து, கண்ட்ரோல் பேனலைத் திறந்து, User Accounts தேர்ந்தெடுத்து, அடுத்து Create a password என்பதில் கிளிக் செய்து, உங்கள் அக்கவுண்ட்டிற்கான பாஸ்வேர்டை அமைக்கலாம். பாஸ்வேர்டை இரண்டாவது முறையும் டைப் செய்து உறுதி செய்திட வேண்டும். தேவைப்பட்டால், பாஸ்வேர்டினை நினைவு படுத்திப் (password hint) பார்க்க ஏதேனும் தகவல்களையும் அமைக்கலாம். நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைக்கப்பட்டிருந்தால், அட்மினிஸ்ட்ரேட்டர் மட்டுமே பாஸ்வேர்டை அமைக்க முடியும்.

6. இதற்கு, Control Panel திறந்து, User Accounts தேர்ந்தெடுத்து, Manage another account தேர்ந்தெடுக்க வேண்டும். இங்கு, நீங்கள் எந்த அக்கவுண்ட்டிற்கு பாஸ்வேர்ட் அமைக்க வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Create a password என்பதில் அழுத்தவும். பின்னர், பாஸ்வேர்டினை டைப் செய்திடவும். பின்னர் மீண்டும் அதனை உறுதிப் படுத்தும் வகையில், டைப் செய்திடவும். பின்னர் Create password என்பதில் அழுத்தி வெளியேறவும்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல