ஞாயிறு, 28 ஜூலை, 2013

டிப்ஸ்... டிப்ஸ்...

விண் 8ல் ஸ்டார்ட் கீ செயல்பாடு

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஸ்டார்ட் கீ இல்லாமல், பலர் முகம் சுழிக்கின்றனர். ஏறத்தாழ, அதன் செயல்பாட்டினைப் பெறும் சிறிய வழி ஒன்று உள்ளது. விண்டோஸ் கீயை அழுத்தி, கீ போர்டில் எக்ஸ் (X) கீயினைச் சேர்த்து அழுத்தவும்.

திரையின் கீழாக, வலது புறத்தில், ஸ்டார்ட் ஸ்கிரீன் அருகே, சிறிய விண்டோ ஒன்று பாப் அப் ஆகும். இந்த விண்டோவில், நாம் வழக்கமாகக் காணும் Desktop, Control Panel, File Explorer, Task Manager, Programs ஆகியவை கிடைக்கும். இதன் மூலம், விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் புதியதாகப் பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் தயக்கமான செயல்பாடுகள் நீங்கும்.
-----------------------------------------------------------
குரோம் பிரவுசரில் DNT எனப்படும் Do Not Track வசதியை எப்படி இயக்கிப் பயன்படுத்துவது?

நம் இணையத் தேடலை, பிரவுசர்கள் பதிந்து கொள்ளக் கூடாது என்ற வசதியை இப்போது அனைத்து பிரவுசர்களுமே வழங்கி வருகின்றன. இதனை நீங்கள் குறிப்பிடும் குரோம் பிரவுசரில் இயக்க, Alt+E அல்லது Alt+F அழுத்தவும். பின்னர் Settings தேர்ந்தெடுக்கவும். இதில் கீழாகச் சென்று, Show Advanced Settings என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் இன்னும் கீழாகச் சென்று, Privacy section என்னும் பிரிவைக் கவனிக்கவும். இதில் Send A Do Not Track Request With Your Browsing Traffic என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

இதில் இன்னொரு அம்சமும் உள்ளது. இந்த விருப்பத்தினை குரோம் பிரவுசர் நிறைவேற்றினாலும், சில இணைய தளங்கள் இதற்கு ஒத்துழைக்காமல் இருக்கலாம். நமக்குத் தெரியாமல், அந்த இணைய தளங்கள், நம் இணைய தள நடவடிக்கைகளைக் கவனிக்கலாம். இதற்கு பிரவுசர் பொறுப்பேற்காது. இந்த தளங்கள் நம்மைப் பற்றிய தகவல்களை, நமக்குத் தெரியாமலேயே எடுத்துக் கொண்டு, தொடர்ந்து தங்களைப் பற்றிய தகவல்களை அனுப்பலாம்.
------------------------------------------

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் கூகுள் குரோம் பிரவுசரை....

இணையத் தேடலைத் தொடங்குகையில், கட்டாயம் பார்த்தே ஆக வேண்டிய சில தளங்கள் திறக்கப்பட்டுத் தயாராகக் கிடைக்க வேண்டும் என விரும்புபவர்கள் இப்படி செட் செய்திட வேண்டும்.

முதலில் பிரவுசரைத் திறந்து கொண்டு, Alt+E அல்லது Alt+F அழுத்தவும். பின்னர் Settings தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் On Startup என்ற பிரிவில், Open A Specific Page Or Set Of Pages என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து Set Pages link என்பதில் கிளிக் செய்திடவும். இதில் இணைய தள முகவரிகளைக் கொடுக்கலாம்.

இந்தத் தளத்தில், நீங்கள் பாஸ்வேர்ட், யூசர் நேம் கொடுத்துத்தான் பயன்படுத்த முடியும் எனில், அவற்றையும் குரோம் பிரவுசரிலேயே பதிந்து சேவ் செய்திடலாம். ஒவ்வொரு முறை, இணைய இணைப்புடன், குரோம் பிரவுசரை இயக்குகையில், இந்த தளங்கள், தாமாகத் திறக்கப்பட்டு, உங்களின் பயன்பாட்டிற்குக் காத்திருக்கும்.

-------------------------------------------------------------------
முழுப்பக்க ஸ்கிரீன் ஷாட் அறிய


இணையப் பக்கம் ஒன்றின் ஸ்கிரீன் ஷாட் வேண்டுமென்றால், அது முழுமையாகக் கிடைக்காது. ஸ்கிரீனில் தெரியும் பகுதி மட்டுமே கிடைக்கும். முழுமையாகக் கிடைக்க வேண்டும் எனில், இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராம் தேவை. ஒவ்வொரு பிரவுசருக்குமான இத்தகைய புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. Screengrab for Firefox பயர்பாக்ஸ் பிரவுசருக்கும், IE Screenshot இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு, Talon குரோம் பிரவுசருக்கு என்ற புரோகிராம்களும் இணையத்தில் கிடைக்கின்றன. கூகுள் சென்று இவை இருக்கும் தளம் அறிந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தவும்.

--------------------------------------------------------------

விண்டோஸ் பார்டர்களைக் குறைக்க

விஸ்டாவின் ஏரோ கிராபிக்ஸ் புரோகிராம்களுக்கும் போல்டர்களுக்கும் நல்ல திட்டையான பார்டர்களைத் தருகிறது. இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் போன்ற புரோகிராம்களைக் கையாள்கையில் இந்த பார்டர்கள் அதிகம் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. இடம் எடுத்துக் கொள்வது மட்டுமின்றி நாம் பணியாற்ற இடம் தராமல் எரிச்சலூட்டுகின்றன. இந்த பார்டர்களின் அளவைக் குறைக்க முடியாதா என்ற ஆசை நமக்கு எழும்.

இதற்கு வழிகளைத் தருகிறது விஸ்டா. இந்த பார்டர்களை அளவோடு வைத்திட டெஸ்க்டாப்பில் கிளிக் செய்திடவும். பின் பெர்சனலைஸ் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Windows Color and Apperanceஎன்ற இடத்தில் கிளிக் செய்திடவும். இப்போது செட் செய்வதற்கான டயலாக் பாக்ஸ் கிடைக்க வேண்டும். இது கிடைக்காவிட்டால் ‘Open classic appearance properties for more color options’ என்பதில் கிளிக் செய்திடவும். அதில் Advanced என்ற பட்டனில் கிளிக் செய்திடுக. பின் கிடைக்கும் மெனுவில் Border Padding என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு சைஸ் செட்டிங் அளவை 4 க்கும் குறைவாக அமைக்கவும். அதன்பின் ஓகே இருமுறை கிளிக் செய்து வெளியேறவும். இனி எத்தனை விண்டோக்கள் திறந்தாலும் பார்டர்கள் எடுக்கும் இடம் குறைவாகவே இருக்கும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல