ஞாயிறு, 28 ஜூலை, 2013

விண்டோஸ் 8ல் மீடியா பிளேயர் செட் செய்திட

விண்டோஸ் 7 சிஸ்டத்திலிருந்து விண்டோஸ் 8 சிஸ்டம் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர் அதில் உங்களுக்குப் பழக்கமான விண்டோஸ் மீடியா பிளேயர் புரோகிராமினை உங்கள் ஆடியோ பைல்களை இயக்கும் மாறா நிலை புரோகிராமாக செட் செய்திட ஒரு சில செட்டிங்ஸ் மாற்றங்களை மேற்கொண்டால் போதும்.

1. நீங்கள் ஸ்டார்ட் ஸ்கிரீனில் இருந்தால், அங்கு Default என டைப் செய்திடவும். இப்போது திரையின் இடது பக்கத்தில் Default Programs என கிடைக்கும். அதில் கிளிக் செய்திடவும். நீங்கள் டெஸ்க் டாப் மோடில் இருந்தால், கண்ட்ரோல் பேனலைத் திறந்து Default Programs என்பதில் கிளிக் செய்திடவும்.

2. இங்கு Set your default programs என்பதில் கிளிக் செய்து, பின்னர், உங்கள் கம்ப்யூட்டரில் என்ன என்ன புரோகிராம்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளன என்று கிடைக்கும் பட்டியலுக்குக் காத்திருக்கவும்.

3. கீழாகச் சென்று, விண்டோஸ் மீடியா பிளேயர் என்பதனைக் காணவும். இதில் கிளிக் செய்திடவும்.

4. இப்போது உங்களுக்கு இரண்டு ஆப்ஷன் உள்ளது. ஆடியோ, வீடியோ என எந்த பைலையும் இயக்கும் வகையில், விண்டோஸ் மீடியா பிளேயரை, மாறா நிலை புரோகிராமாக அமைக்கலாம். அல்லது தனித்தனியே பைல்களின் வகையை இதனுடன் தொடர்பு படுத்தலாம். முடிவு செய்து அதற்கேற்ப Set this program as default என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.

5. முடிந்தவுடன் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல