ஞாயிறு, 28 ஜூலை, 2013

விண்டோஸ் 7ல் கம்ப்யூட்டரை பூட் செய்து எவ்வளவு நேரம் இயங்கிக் கொண்டிருந்தது என்று அறிய

டாஸ்க்பாரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Task Manager என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது (Ctrl+Shift+Esc) என்ற கீகளை அழுத்தவும். இப்போது டாஸ்க் மானேஜர் விண்டோ கிடைக்கும். இதில் தரப்பட்டுள்ள டேப்களில் Performance என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

இங்கு Up Time பிரிவில், உங்கள் கம்ப்யூட்டர் பூட் செய்த பின்னர் எவ்வளவு நேரம் இயங்கியுள்ளது என்று காட்டப்படும். இந்த வழிகளை விண்டோஸ் விஸ்டாவிலும் பின்பற்றலாம்.

விண்டோஸ் எக்ஸ்பியில் (புரபஷனல் எடிஷனில் மட்டும்) ஸ்டார்ட், ரன் விண்டோ (Start>Run)செல்லவும். அதில் cmd என டைப் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும்.

இப்போது டாஸ் இயக்கக் கட்டளைப் புள்ளி (Command Prompt) கிடைக்கும். இங்கு systeminfo என டைப் செய்து என்டர் தட்டவும். கம்ப்யூட்டர் சில நிமிடங்கள் அல்லது விநாடிகள் எடுத்துக் கொண்டு, நேரத்தைக் கணித்துச் சொல்லும். இது நாள், மணி, நிமிடம் மற்றும் விநாடி என்ற அளவுகளில் காட்டப்படும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல