புதிய சொற்களைத் தன் அகராதியில் ஒரு சொல்லாக இணைக்க வேண்டும் எனில், அந்த சொல் குறைந்தது பத்து ஆண்டுகளாவது புழக்கத்தில், ஒரே பொருளுடன் இருக்க வேண்டும் என்ற விதியை, ஆக்ஸ்போர்ட் அகராதி ஆசிரியர் குழு கொண்டுள்ளது.
அண்மையில், தன் இந்த விதியைத் தளர்த்தி, “Tweet” என்ற சொல்லைத் தன் அகராதியில் இணைத்துக் கொண்டுள்ளது. இதனை ஒரு பெயர்ச் சொல்லாகவும், வினைச் சொல்லாகவும் ஏற்றுக் கொண்டுள்ளது.
ட்விட்டர் இணைய தளத்தில் பதிவு செய்திடுவதனையே இந்த சொல் குறிக்கிறது. ட்விட்டர் சமூக இணைய தளம் தொடங்கி, சென்ற மார்ச் மாதத்துடன் ஏழு ஆண்டுகளே ஆன நிலையில், இந்த சொல் சேர்க்கப்பட்டிருப்பது, இது பரவலாக, உலகம் எங்கும் பயன்படுத்தப்படுவதனையே காட்டுகிறது.
இதே போல “follow” என்ற சொல்லுக்கான பொருளைத் தருகையில், பேஸ்புக் அல்லது கூகுள் ப்ளஸ் போன்ற வலைத் தளங்களில், ஒருவரின் பதிவினைத் தொடர்ந்து கருத்து தெரிவித்தல் என்ற பொருளையும் சேர்த்துள்ளது.
இந்த பொருளில், இச்சொல் பயன்படுத்தும் பழக்கம் உலகளாவிய அளவில் பெருகியதே இதற்குக் காரணமாகும்.
இதே போல, இணையம் சார்ந்த பொருள் அடிப்படையில்,“flash mob,” மற்றும் “live blog” ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில் நுட்ப புதிய சொற்களாக, “3D printer” மற்றும் “Search engine optimization,” ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக