புதன், 7 ஆகஸ்ட், 2013

பிரித்தானியாவிலிருந்து தாய்நாடு திரும்பிய பங்களாதேஷ் பெண் உறவினர்களால் படுகொலை

பங்­க­ளா­தேஷை பிறப்­பி­ட­மாகக் கொண்ட பிரித்­தா­னியப் பெண் ணொருவர், அவ­ரது செல்வ நிலையில் பொறாமை கொண்ட அவ­ரது உற­வி­னர்­களால் கொல்­லப்பட் டுள்ளார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்தப் படு­கொலை தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

கிழக்கு லண்­டனில் ஸ்டெப்னி எனும் இடத்தில் வசிக்கும் பிரித்­தா­னியப் பிர­ஜை­யான ரெஹானா பேகம் (43 வயது), விடு­மு­றையைக் கழிப்­ப­தற்­காக தனது கணவர் மற்றும் 12 வயது மக­னுடன் பங்­க­ளா­தே­ஷி­லுள்ள சுனம்கொன்ஜ் நக­ருக்குச் சென்ற போதே அவர் படு­கொலை செய்­யப்­பட்­டுள்ளார்.

4 ஆண்­களைக் கொண்ட குழு­வொன்று ரெஹானா பேகத்­தி­ட­மி­ருந்த நகைகள் மற்றும் பணத்தை அப­க­ரித்துச் செல்­வ­தற்­காக அவரைத் தாக்கி படு­கொலை செய்­த­தாகக் கூறப்­ப­டு­கி­றது.

இதன்­போது அந்தக் குழு­வினர், ரெஹானா பேகத்தை காப்­பாற்ற முயன்ற அவ­ரது மரு­ம­கள்மார் மற்றும் மரு­மகன் ஆகி­யோ­ரையும் தாக்­கி­யுள்­ளனர்.

இந்தச் சம்­ப­வத்தில் ரெஹானா பேகத்தின் 15 வயது மரு­ம­க­னது வலது கரம் மேற்­படி குழுவால் துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

ரெஹானா பேகத்தின் அள­வுக்­க­தி­க­மான செல்­வத்தால் பொறாமை கொண்ட அவரது தூரத்து உறவுமுறையானவர்களே இந்தப் படுகொலையைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல