புதிதாக பிறந்த ஆண் குழந்தை இறந்து விட்டதாக தாயிடம் தெரிவித்து அதனை ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மருத்துவர் ஒருவர் விற்ற சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
ஷாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த மகப்பேற்று வைத்தியரான ஸாங் லின் என்பவரே இவ்வாறு குழந்தையை அபகரித்து விற்றுள்ளார்.
அவர் குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அது பிறந்தவுடன் இறந்து விட்டதாக குழந்தையின் தாயாரான டொங் வானிற்கு (31 வயது) தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து மருத்துவர் அந்தக் குழந்தையை 3000 ஸ்ரேலிங் பவுணுக்கு குழந்தைகளை கடத்துவதில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு விற்றுள்ளார்.
பிறந்த போது ஆரோக்கியமாக இருந்த குழந்தை சில மணி நேரத்தில் நோய் பாதிப்பால் இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்ததால் சந்தேகம் கொண்ட குழந்தையின் தாயான டொங் வானும் தந்தையான லெயி குபோபெங்கும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மருத்துவர் குழந்தையை விற்றிருப்பதை கண்டறிந்து அவரைக் கைது செய்துள்ளனர்.
குழந்தை ஷாங்ஸி மாகாணத்திலிருந்து நூற்றுக்கணக்கான மைல் தொலைவிலுள்ள ஹெனான் மாகாணத்தில் ஆட்கடத்தல்காரர்களால் விற்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த குழந்தையின் கடத்தலுடன் தொடர்புடைய மேலும் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தற்போது குழந்தை அதனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக