புதன், 7 ஆகஸ்ட், 2013

யாழ்ப்பாணத்தில் அமெரிக்க விமானப்படையின் “பசுபிக் ஏஞ்சல்” கூட்டு செயற்றிட்டம் அமுலாகிறது

இன்று புதன்கிழமை ஆரம்பமான இந்தப் பயிற்சி வரும் 10ம் திகதி வரை தொடர்ந்து இடம் பெறவுள்ளது.

இந்தப் பயிற்சி, மருத்துவ முகாம்களை நடத்துதல், உட்கட்டுமானங்களைப்
புனரமைக்கும் செயற்திட்டம் என்று இரண்டு பகுதிகளாக இந்த கூட்டு நடவடிக்கை நடத்தப்படுகிறது. மருத்துவமுகாம் அல்வாய் வடக்கு, அச்செழு ஆகிய கிராமங்களில் நடத்தப்படுகிறது.

புனரமைப்புத் திட்டம், பிரதானமாக பாடசாலைகளை திருத்துதல் மற்றும்
அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை மையப்படுத்தி
மேற்கொள்ளப்படுகிறது.

புன்னாலைக்கட்டுவன் ஆரம்பப்பாடசாலை, குட்டியப்புலம் கலவன் பாடசாலை, அச்செழு சிவப்பிரகாச வித்தியாலயம் ஆகியவை இந்தத் திட்டத்தின்கீழ் அமெரிக்க மற்றும் இலங்கை விமானப்படை பொறியியலாளர்களால் திருத்தியமைக்கப்படவுள்ளன.

கடற்படை மற்றும் விமானப்படையுடன், அமெரிக்கா தொடர்ச்சியாக மனிதாபிமான மற்றும், அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கூட்டுப்பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கும் திட்டமிட்டிருக்கிறது.



Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல