செல்லப்பிராணிகளுக்கான கடையிலிருந்து தப்பிச் சென்ற மலைப்பாம்பொன்று வீடு ஒன்றில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த 2 வயது மற்றும் 7 வயதுடைய சகோதரர்களை சுற்றிவளைத்து நெரித்துக் கொன்ற சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவத்தில் கொன்னொர் நோவா என்ற இரு சின்னஞ்சிறு சகோதரர்களே பலியாகியுள்ளனர். நியூ புரன்ஸ்விக்கில் கம்பெல்டன் எனும் இடத்திலுள்ள ரெப்ரைல் ஓசன் வளர்ப்புப் பிராணிகள் கடைக்கு மேலாக அந்த சிறுவர்கள் தங்கியிருந்த வீடு அமைந்துள்ளது.
இந்நிலையில் 100 இறாத்தல் நிறையுடைய மேற்படி இராட்சத பாம்பு கடையிலிருந்து வெளியேறி குடியிருப்பின் கூரைப் பகுதியை சென்றடைந்துள்ளது.
அதன் பின்னர் கூரைப் பகுதியை உடைத்துக் கொண்டு வீட்டினுள் விழுந்த அந்த மலைப்பாம்பு, அங்கு உறங்கிக்கொண்டிருந்த சிறுவர்களைத் தாக்கியுள்ளது.
சிறுவர்கள் வளர்ப்பு பிராணிகள் கடைக்கு மேலாக இருந்த தமது குடும்ப நண்பர் ஒருவரது வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவுப் பொழுதை கழிக்கச் சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
மறுநாள் திங்கட்கிழமை காலை அறையில் மலைப்பாம்பொன்றுடன் சிறுவர்கள் இருவரும் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வகையைச் சேர்ந்த மலைப்பாம்புகள் மனிதர்களைத் தாக்குவது அபூர்வமானது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மேற்படி மலைப் பாம்பைக் கைப்பற்றியுள்ள கனேடிய பொலிஸார், இந்தச் சம் பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக