ஞாயிறு, 24 நவம்பர், 2013

விண்டோஸ் 8ல் பாஸ்வேர்ட்டினை நிறுத்துவதற்கு....

விண்டோஸ் 8 சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கி செயல்படாமல் இருந்தால், ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் கழித்து, மீண்டும் ஸ்டார்ட் ஸ்கிரீன் சென்று பாஸ்வேர்ட் கேட்கிறது. இதனை எப்படி நிறுத்துவது?

முதலில் Search Charm திறக்கவும்.

பின்னர், இங்கு Settings தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து "lock the computer” என டைப் செய்திடவும்.

கிடைக்கும் முடிவுகளில் Lock the computer when I leave it alone for a period of time என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து ஒரு விண்டோ கிடைக்கும். இதில் கிடைக்கும் Wait பாக்ஸில், காணப்படும் நேரத்தினை, நீங்கள் விரும்பும் வகையில் கூடுதலாக அமைக்கலாம்.

இதிலேயே, நீங்கள் பாஸ்வேர்ட் கொடுத்துத்தான், மீள இயக்க வேண்டுமா என்பதனையும் நிர்ணயிக்கலாம்.

இதே விண்டோவில், திரை அமைப்பை மாற்றலாம்.

பவர் செட்டிங்ஸ் அமைப்பை மாற்றி அமைக்கலாம்.

மாற்றங்களை எல்லாம் ஏற்படுத்திய பின்னர், Apply என்பதில் கிளிக் செய்து விண்டோவினை மூடவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல