ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மீண்டும் இலங்கைக்கு தொல்லை கொடுக் கும் கெட்ட கனவாக மாறத் தொடங்கியுள் ளது.
கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்ட காலஅவகாசம் அடுத்தாண்டு மார்ச் மாதம் முடிவடையவுள்ளது.
ஜெனீவா தீர்மானத்துக்கு அமைவாக இலங்கை அரசாங்கம் நடந்து கொண்டுள்ளதா - தனது பொறுப்புக்களை நிறைவேற்றியுள்ளதா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பு, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையி டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவர், ஏற்கனவே கடந்த ஓகஸ்ட் மாத இறுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்து விட்டு, சமர்ப்பித்த வாய்மூல அறிக்கையில், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள, அமர்வில் இலங்கை அரசாங்கம் கடுமையான அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பது முன்னரே தெரிந்த விடயம் தான்.
அரசாங்கமோ, அதற்கு இன்னமும் சில மாதங்கள் இருக்கிறது தானே என்ற அலட்சியத்தில் இருந்தது.
ஆனால், அந்த அலட்சியத்துக்கு ஆப்பு வைத்து விட்டுப் போயிருக்கிறார் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன்.
அடுத்த நான்கு மாதங்களுக்குள் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை சுதந்திரமாகவும், நம்பகமாகவும் விசாரிக் கத் தவறினால், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மூலம், சர்வதேச விசாரணைக்கு அழுத்தங்களைக் கொடுப்போம் என்று அவர் எச்சரித்துள்ளார்.
பிரித்தானியாவின் இந்த எச்சரிக்கை சாதாரணமானதோ, வெறும் தேர்தல் பிரசாரங்களுக்கானதோ அல்ல.
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக, இதுவரை அமெரி க்கா எந்தளவுக்கு கடுமையான போக்கை கடைப்பிடித்ததோ, அதற்கு நிகராக அல்லது அதற்கு அதிகமான கடும் நிலைப்பாட்டை பிரித்தானியா எடுப்பதற்கான அறிகுறியே இதுவாகும்.
பிரித்தானியப் பிரதமரின் எச்சரிக்கையை அடுத்தே, மீண்டும் ஜெனீவா குறித்து பேச்சுக்கள் தீவிரமடைந்துள்ளன.
டேவிட் கமரூனின் எச்சரிக்கையையோ காலக்கெடுவையோ ஏற்க முடியாது என்று ஜனாதிபதியும் அமைச்சர்களும் நிராகரித்து ள்ளனர்.
ஆனால்,அவற்றையெல்லாம்,ஐ.நா. செவிமடுத்துக் கொண்டிருக்கப் போவதில்லை.
ஏற்கனவே இரண்டு தீர்மானங்கள் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இந்த இரண்டு தீர்மானங்களை யும் நடைமுறைப்படுத்த இலங்கை தவறியுள்ள நிலையில், சர்வதேச சமூகத்துக்கு சர்வதேச விசாரணை என்ற ஒரே தெரிவு மட்டுமே எஞ்சியுள்ளது.
ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தத் தவறினால், இந்த வழிமுறையை நோக்கி நகர்வது தவிர்க்க முடியாதது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் ஏற்கனவே பலமுறை எச்சரித்து விட்டனர்.
இப்போது பிரித்தானியாவும் அதையே வலியுறுத்த ஆரம்பித்துள்ள நிலையில், சர்வதேச விசாரணை என்ற விடயம் அழுத்தம் பெறத் தொடங்கியுள்ளது.
சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடக்கு மா, அதற்கான சாத்தியம் இருக்குமா, உலக வல்லரசு நாடுகள் இதைத் தடுத்து விடுமா என்று சந்தேகம் கொண்டிருந்தவர்களுக்கு, தற்போது சர்வதேச விசாரணையை நோக்கி இலங்கை தள்ளப்பட்டு வருவதான உண ர்வு ஏற்படுவதாகத் தெரிகிறது.
எனினும், இலங்கை அரசாங்கத்தினதும் அமைச்சர்களினதும், வீர வசனங்கள் மட் டும் குறையவில்லை.
சர்வதேச விசாரணை என்ற தூக்கு மேடையை நோக்கி இலங்கையை இழுத் துச் செல்வதற்கான களமாகவே, அடுத்த மார்ச் மாதம் நடக்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் அமையவுள்ளது என்று தயான் ஜயதிலக வெளியிட்டு ள்ள கருத்து மிக முக்கியமானது.
ஏற்கனவே தயான் ஜயதிலக, ஜெனீவா தீர்மானங்கள் குறித்து வெளியிட்ட கருத்து களும், அதை யதார்த்தமாக அணுக முற்பட்டதன் விளைவும் தான், அவர் மீதான அரசாங்கத்தின் கடுப்புக்கு காரணமாக அமைந்தது.
டேவிட் கமரூனின் எச்சரிக்கையை அலட்சிப்படுத்தக் கூடாது என்றும், அது அடுத்த ஜெனீவா கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான நகர்வுக்கு அடிப்படையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
2012ஆம் ஆண்டு மார்ச் மாத அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம், அதையடுத்து, 2013 மார்ச் மாதம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தொடர்ச்சியாக, அடுத்த ஆண்டிலும் அமெரிக்காவே தீர்மானத்தைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்க முடியாது.
ஏனென்றால், 2013 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை தவறினால், தொடர்ந்து தீர்மானங்களை கொண்டு வந்து கொண்டிருக்க முடியாது, ஐ.நா.வின் ஏனைய சபைகளினது ஒத்துழைப்புகளுடன் மாற்றுவழி ஒன்று பற்றி யோசிக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் ஏற்கனவே கூறியுள்ளனர்.
இத்தகைய நிலையில், மீண்டும் ஒரு கண்டனத் தீர்மானத்தைக் கொண்டுவர அமெரிக்கா பெரும்பாலும் விரும்பாது.
முன்னைய தீர்மானங்களின் போதும் பிரித்தானியா, ஐ.நா. மனித உரிமைக் பேர வையில், வாக்களிக்கும் உரிமையைக் கொண்ட நாடாகவோ, நேரடியாக தீர்மான த்தைக் கொண்டு வரக் கூடிய நாடாகவோ இருக்கவில்லை.
ஆனால், அடுத்த மார்ச் மாதம் நடக்கவு ள்ள அமர்வில், ஐ.நா மனித உரிமை பேரவைக்குள் பிரித்தானியா நுழையப் போகிறது.
வரும் ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான அங்கத்து வம் பெறுகிறது பிரித்தானியா.
இந்தநிலையில், இலங்கைக்கு எதிரான அடுத்த நகர்வில் பிரித்தானியா முக்கிய பங்கு வகிக்கலாம்.
அது, அமெரிக்காவே இலங்கை மீது வன் மம் பாராட்டுகிறது என்ற கருத்துக்களை உடைக்கவும் பயன்படும்.
அதேவேளை, ஐ.நா. பொதுச்சபையில், கடந்த 12ஆம் திகதி நடந்த வாக்கெடுப் பில், ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் பெறப்போகும், 14 நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், இலங்கைக்கு எப்போதும் வக்காலத்து வாங்கும் ரஷ்யா, சீனா, கியூபா ஆகிய நாடுகள் இருப்பது முக்கியமான விடயம்.
அல்ஜீரியா, சீனா, கியூபா, பிரான்ஸ், மாலைதீவு, மெக்ஸிகோ,மொராக்கோ, நமீ பியா, ரஷ்யா, சவூதி அரேபியா, தென்னாபிரிக்கா, மசிடோனியா, பிரித்தானியா, வியட்நாம் ஆகிய நாடுகளே புதிதாக பேரவைக்குள் நுழையவுள்ளன.
அங்கோலா, ஈக்வடோர், குவாட்டமாலா, லிபியா, மலேஷியா, மாலைதீவு, மொரிட்டானியா, போலந்து, கட்டார், மோல்டோவா, ஸ்பெய்ன், சுவிட்ஸர்லாந்து. தாய்லாந்து, உகண்டா ஆகிய நாடுகளுக்குப் பதி லாகவே, இந்தப் புதிய 14 நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில், 2013 ஜெனீவா தீர்மானத்தை, ஆதரித்த நாடுகள் ஆறு. எதிர்த்த நாடுகள் ஆறு. நடுநிலை வகித்த நாடுகள் இரண்டும் அடங்குகின்றன.
புதிதாக உள்வரும் நாடுகளில், அடுத்தமுறை இலங்கைக்குக் கை கொடுக்கக் கூடிய நாடுகள் என்றால் சீனா, ரஷ்யா, கியூபா, சவூதி அரேபியா, வியட்நாம், அல்ஜீரியா போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
கடந்த முறை தீர்மானத்தை எதிர்த்த மாலைதீவின் நிலை இம்முறை மாற்றம் பெறலாம்.
அதேவேளை, கடந்தமுறை தீர்மானத்தை 25 நாடுகள் ஆதரித்த நிலையில், அடுத்த ஆண்டு தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அந்தளவு நாடுகள் ஆதரிக்குமா என்ற கேள்வியும் இருக்கிறது.
எனினும், அமெரிக்காவோ, பிரித்தானியாவோ கொண்டுவரக் கூடிய அடுத்த தீர்மானத்தை தோற்கடிக்கும் அளவுக்கு இலங்கையால் செயற்பட முடியாது என்றே தயான் ஜயதிலக குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கூட்டத்தொடரில், இறுதியான காலக்கெடு ஒன்று கொடுக்கப்படும், அல்லது தடைகள் விதிக்கப்படும் என்றும், அதற்கும் மசியாது போனால், 2015இல் இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எது எவ்வாறாயினும், இலங்கை அரசா ங்கம் சர்வதேச விசாரணைப் பொறிமுறையை ஏற்கமுடியாது என்றே கூறிவருகிறது,
ஆனால், ஐ.நா.அமைப்பு ஒன்றில் தீர்மானத்தை முன்னெடுக்கும்போது, இலங்கையின் விருப்புவெறுப்புகள் எல்லாம் கருத்தில் எடுக்கப்படாமல் போய்விடும்.
உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கையில்லை என்றும், சர்வதேச விசாரணைகளே ஒரே வழி என்றும் இதுவரை கூறிவந்தவர் நவநீதம்பிள்ளை.
இப்போது, அதே நிலைப்பாட்டுக்கு டேவிட் கமரூனும் வந்துள்ளது நவநீதம் பிள்ளையின் கருத்தை இன்னும் பலமடை யச் செய்துள்ளது.
இதுவரை அமெரிக்கா இந்தளவுக்கு முன் னேற்றமான கருத்தை வெளியிடவில்லை.
ஆனால், சமீபகாலமாக அமெரிக்கா மௌனமாக இருந்து வந்தாலும், போர்க் குற்றங்கள் குறித்த உறுதியான ஆதாரங் களை சேகரிக்கும் முயற்சியில், அது ஈடுபட் டுள்ளதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.
ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவரும், தெற்கு மத்திய ஆசிய விவகாரங் களுக்கான புதிய உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலும், அமெரிக்க இரா ஜாங்கத் திணைக்கள அதிகாரிகளும், அடுத்த மார்ச் அமர்வில் இலங்கைக்கு கடிவாளம் போடும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.
எனவே, ஜெனீவா பற்றிய கெட்ட கனவு கள் இனி இலங்கையின் தூக்கத்தையும் நிம் மதியையும் கெடுக்கப் போவது உறுதி.
சுபத்ரா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக