கொமன்வெல்த் மாநாடு இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்தளவுக்கு வெற்றியைத் தரவில்லை என்பதுடன், எதிர்மாறான விளைவுகள் பலவற்றையும் ஏற்படுத்தியுள்ளன.
சர்வதேச சமூகம், இந்த மாநாட்டைப் பயன்படுத்தி கிட்டத்தட்ட இலங்கையை ஒரு வட்டத்துக்குள் சிக்க வைத்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த மாநாட்டை ஒட்டி நடந்துள்ள பல நிகழ்வுகள் தான் இந்த சந்தேகத்தை கிளப்பியுள்ளன. பொதுவாகவே, சர்வதேச இராஜதந்திர அரங்கில், இரண்டு விதமான அணுகு முறைகள் கடைப்பிடிக்கப்படுவதுண்டு. முதலாவது கடும்போக்கு அணுகுமுறை, இரண்டாவது மென் கடும்போக்கு அணுகுமுறை.
ஒரு நாட்டை முற்றாக ஓரங்கட்டி, ஒதுக்கித் தள்ளி, அதன் ஆட்சியை மாற்ற வல்லமை மிக்க நாடுகள் திட்டமிட்டால், அதற்காக கடும்போக்கை கடைப்பிடிக்கத் தவறுவதில்லை.
பொருளாதாரத்தடை, ஆயுத ஏற்றுமதித் தடை என்று அடுக்கடுக்கான தடைகளை விதித்து, உச்சக்கட்டமாக படைகளை அனுப்பி தமது இலக்கை அடைவது அவற்றின் வழக்கம். ஈரான், வடகொரியா, கியூபா போன்ற நாடுகள் இத்தகைய தடைகளை இப்போதும் எதிர்கொள்கின்றன.
ஈராக், லிபியா போன்ற நாடுகளில் இத்தகைய தடைகள், படைத் தலையீடு வரை விரிந்தது. இத்தகைய கடும்போக்கை இலங்கை மீது செலுத்தும் திட்டம் ஏதும், தற்போது வல்லமை மிக்க நாடுகளின் கையில் இல்லை.
ஆனால், இலங்கை மீது மென் கடும்போக்கு அணுகுமுறையை கடைப்பிடிக்கும் திட்டத்தை மேற்குலக நாடுகள் கொண்டிருப்பது உண்மை. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இரண்டு தீர்மானங்களும் இதற்குச் சாட்சி.
அதுமட்டுமன்றி, இலங்கைக்கு எதிராக அமெரிக்காவும், ஏனைய அதன் சார்பு நாடுகளும் கொண்டுள்ள அல்லது வெளிப்படுத்தி வரும் கருத்துகள், இந்த நிலைப்பாட்டை வலுப்படுத்துகின்றன.
அதாவது, இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு, செயற்பாடுகளை நேரடியாக மேற்கொள்ளாது போனாலும், இலங்கையை ஒரு வட்டத்துக்குள் கொண்டு வருவதற்கு –- தமது பிடிக்குள் சிக்கவைத்துக் கொள்வதற்கு மேற்கு நாடுகள் முனைகின்றன என்பதில் சந்தேகமில்லை.
அதற்கான கடிவாளமாகவே போர்க்குற்ற விவகாரங்களும், பொறுப்புக்கூறலும் அமைந்துள்ளன. இந்த விவகாரங்களை வைத்து, மிரட்டி இலங்கை அரசாங்கத்தைக் கொண்டு சில காரியங்களை நிறைவேற்றச் செய்வதற்கு சர்வதேச சமூகம் முனைவதாக தெரிகிறது.
அதாவது இலங்கையை அடித்து முறிப்பது அவர்களின் நோக்கமல்ல, பயமுறுத்தி வளைப்பது தான் அவர்களின் இலக்காகத் தெரிகிறது. கொமன்வெல்த் மாநாட்டில், மேற்குலகின் ஆதிக்கம் குறைவு. ஏனென் றால், முக்கியமாக அமெரிக்கா அதில் இல்லை. அதன் கூட்டாளிகளான பிரான்ஸ் போன்ற ஏனைய பல ஐரோப்பிய நாடுகளும் இல்லை.
ஆனால், பிரித்தானியா, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து, கனடா போன்ற மேற்குலக நாடுகள் இதில் உள்ளன. கனடாவும், பிரித்தானியாவும் இலங்கைக்கு எதிராக கொமன்வெல்த் மாநாட்டில் வரிந்து கட்டிக் கொண்டு செயற்பட்டன. ஆனாலும், இந்த மாநாட்டில், மேற்குலக நாடுகள் ஒன்றுபட்டு ஒரே குரலாக ஒலிக்கவில்லை.
சர்வதேச அரங்கில், வழக்கமாக ஒரே குரலில் ஒலிக்கும்- – செயற்படும் மேற்குலக நாடுகள், கொமன்வெல்த் மாநாட்டில் இலங்கைக்கு சார்பாகவும் எதிராகவும் நடந்து கொண்டது புதிரான விடயம் தான்.
இந்த விடயத்தில், இலங்கைக்கு முற்றிலும் சார்பாக நடந்து கொண்டது அவுஸ்ரேலியா, அதற்கு முக்கியமான காரணம், அகதிப் படகுகளை தடுப்பதற்கு இலங்கைக் கடற்படையின் உதவி தேவை. அதற்காக, இலங்கையின் மனிதஉரிமை மீறல்களையெல்லாம் கண்ணை மூடிக் கொண்டு ஆதரி க்கத் தயாரானது.
ஆனால் நியூஸிலாந்து, போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணையெல்லாம் தேவையில்லை என்று குத்துக்கரணம் அடித்ததன் பின்னணி மர்மமாகவே உள்ளது. இவ்வாறு மேற்குலகம் முரண்பட்டுக் கொண்டிருக்க, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், மாநாட்டிற்கு வராமல் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
எத்தகைய சூழலில் அவர் வராது போயிருந்தாலும், அதற்கு அடிப்படை மனித உரிமை மீறல்கள் தான் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில், அவரது எதிர்ப்பு இலங்கைக்கு சார்பானதாக கருதப்படத்தக்கதல்ல. அதுமட்டுமல்ல, கனடாவைப் போலவே, வெளிப்படையான புறக்கணிப்பை வெளிப்படுத்திய ஒரே நாடு மொரிசியஸ்தான்.
கனேடியப் பிரதமரைப் போன்றே, மொரிசியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம் கூலம், கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதாக அறிவித்தார். இலங்கையின் மனிதஉரிமை மீறல்களை சுட்டிக்காட்டி அவர் கொழும்பு மாநாட்டை புறக்கணித்தது முக்கியமானது.
இலங்கையை எதிர்த்தமையால், கனடாவோ, பிரித்தானியாவோ எதையும் இழக்கவில்லை. ஆனால், மொரிசியஸ் பிரதமர், இந்த மாநாட்டைப் புறக்கணித்ததால், அடுத்து மாநாட்டை நடத்தும் வாய்ப்பை இழக்க நேரிட்டது.
அரச தலைமை கொழும்புக்கு வந்தால் தான், அடுத்த மாநாட்டை நடத்த முடியும் என்று கொமன்வெல்த் செயலர் கமலேஷ் சர்மா மிரட்டிப் பார்க்க, கொழும்புக்கு வந்து தான், மாநாட்டை நடத்தும் வாய்ப்பை பெற வேண்டும் என்றால் அத்தகைய வாய்ப்பு தமக்கு வேண்டாம் என்று அந்த வாய்ப்பையே தூக்கி வீசியிருந்தார் மொரிசியஸ் பிரதமர் நவீன் சந்திர ராம் கூலம்.
அதாவது, குறிப்பிட்ட சில நாடுகள் கொமன்வெல்த் மாநாட்டைப் பயன்படுத்தி இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தன. சில நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இன்னும் சில நாடுகள் எதிர்க்காமலும், ஆதரிக்காமலும் வந்து போயின. அவ்வாறு வந்து போன நாடுகளில் ஒன்று தான் தென்னாபிரிக்கா.
நவநீதம்பிள்ளையின் தாய்நாடான தென்னாபிரிக்கா, அண்மைக்காலத்தில் இலங்கையின் மனிதஉரிமை மீறல்களுக்கு எதிராக அதிகம் வாய்திறக்காமல் இருந்து வருகிறது.
மொரிசியஸைப் போன்றே தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவழியினர் அதிகளவு வாழும் தென்னாபிரிக்கா, ஒருகாலத்தில் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக அரசாங்கத்தால் விமர்சிக்கப்பட்ட நாடு.
அந்த நாடு, இலங்கையின் போர்க்குற்றங்கள் மீது கடும் போக்கை வெளிப்படுத்தாதது ஏன் என்ற கேள்வி இப்போது நீடிக்கவே செய்கிறது. புறக்கணிக்கும் அழைப்புகளுக்கெல்லாம் அகப்படாமல், தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா, கொழும்பு வந்து, மாநாடு தொடங்கியதில் இருந்து முடியும் வரை இலங்கையுடன் நின்றிருந்தார்.
ஒருபக்கத்தில், இலங்கைக்கு காலக்கெடு விதித்து, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் பரபரப்பை கிளப்பி விட்ட போது, தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா அமைதியாக இருந்தார். ஆனால், அவரும் இலங்கையை வளைப்பதற்கான ஒரு கருவியாகவே செயற்பட்டுள்ளார் என்றே தெரிகிறது.
ஜெனீவா தீர்மானத்தை இலங்கை நடைமுறைப்படுத்தாவிடின் அடுத்த ஆண்டு இன்னும் கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும் என்று அமெரிக்கா ஏற்கனவே எச்சரிக்கை செய்துள்ளது.
இந்த நிலையில், நான்கு மாதங்களுக்குள் சுதந்திரமான உள்ளக விசாரணையை நடத்தாவிடின், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை மூலம் சர்வதேச விசாரணைக்கு முயற்சிகள் எடுக்கப்படும் என்று பிரித்தானியப் பிரதர் டேவிட் கமரூன் எச்சரித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, இலங்கை விவகாரம் பிரித்தானிய வெளிவிவகாரக் கொள்கையின் ஒரு பகுதியாகியுள்ளதாகவும், எல்லா சர்வதேச அமைப்புகளிலும் இது எழுப்பப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இலங்கையின் மனிதஉரிமை விவகாரத்தில், ஒன்றுபட்டு செயற்படுவோம் என்று கொழும்பு வரமுன்னர் புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் ஒரு இணக்கப்பாட்டைக் கண்டிருந்தார் டேவிட் கமரூன்.
நம்பகமான உள்ளக விசாரணைக்கு இலங்கை இணங்காது போனால், சர்வதேச விசாரணை உறுதி என்ற கருத்து வலுவாக பரப்பப்பட்டு வருகின்ற சூழலில், ஏதாவதொன்றை செயற்படுத்தியாக வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.
அதிலும் கொமன்வெல்த் அமைப்பின் தலைமை வேறு இலங்கையிடம் வந்துள்ளது. அந்தப் பொறுப்பையும் நிறைவேற்றியாக வேண்டும். இத்தகைய அழுத்தங்களின் ஊடாக, சுதந்திரமானதொரு உள்ளக விசாரணைப் பொறிமுறையை நோக்கி இலங்கையை நகர்த்த முனைகிறது சர்வதேச சமூகம். அதற்கான கருவியாகத் தான் தென்னாபிரிக்கா பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது. தென்னாபிரிக்காவில், இனமுரண்பாடுகளை களைய, உண்மை நல்லிணக்க ஆணைக்குழு எவ்வாறு உதவியதோ, அதுபோன்றதொரு ஆணைக்குழுவை அமைப்பது குறித்து இலங்கை ஆலோசிப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. இதுகுறித்துப் பேசவே தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா கொமன்வெல்த் மாநாட்டுக்கு வந்திருந்தார். அந்தக் காரணத்தை அவர் வெளிப்படையாகவும் கூறினார்.
தென்னாபிரிக்காவின் உதவியுடன், உண்மை நல்லிணக்க ஆணைக் குழுவை அமைத்து, தற்போதைக்கு சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுபட அரசாங்கம் எத்தனிக்கலாம். அதற்கான பொறிமுறையை உருவாக்குவது குறித்து தென்னாபிரிக்கா திட்டங்களை முன்வைத்துள்ளது. அதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தென்னாபிரிக்க ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளார்.
இதுபற்றி, இந்தியாவுடன் கலந்தாலோசித்து விட்டு பதில் கூறமுடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவிட்டதாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ எவ்வாறாயினும் இந்தியாவோ பிரித்தானியாவோ அமெரிக்காவோ இதற்குக் குறுக்கே நிற்கப் போவதில்லை.
அதேவேளை, இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணை அழுத்தங்களை நிராகரித்துள்ள போதிலும், உள்ளக விசாரணையை நடத்த காலஅவகாசம் கோரியுள்ளது கவனிக்கத்தக்கது.
உள்நாட்டுச் சட்டங்களின்படியே விசாரணைகளை நடத்த முடியும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதானால், உள்ளக விசாரணை அமைக்கப்பட்டாக வேண்டும். சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்படுவதை சீனா விரும்பாது. அதனால் தான், சீனா கூட மனித உரிமைகளை மதிக்கவும் ஊக்குவிக்கவும் இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கைக்கு திடீர் ஆலோசனை கூறியது.
உள்ளக விசாரணை மூலம் பொறுப்புக்கூற வைக்கும் ஒரு அணுகுமுறையை தற்போது சர்வதேச சமூகம் மேற்கொண்டாலும் அது சுதந்திரமானதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும். அதற்காகவே தென்னாபிரிக்கா களமிறக்கப்பட்டுள்ளது.
முன்னர் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தி பொறிக்குள் தள்ளுவதற்கு நோர்வேயை சர்வதேச சமூகம் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டதோ, அதுபோன்றே இலங்கை அரசாங்கத்தை வளைத்து ஒரு வட்டத்துக்குள் கொண்டு வருவதற்கு தென்னாபிரிக்கா களமிறக்கப்பட்டுள்ளது.
இது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்று கூறமுடியாது, ஆனால், அடுத்த சில மாதங்களுக்குள் இலங்கை இந்த வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ள மறுத்தால், அடுத்த கட்டமாக மேற்கு நாடுகள், இலங்கையை பெட்டிக்குள் அடைக்கும் முயற்சிகளைத் தான் முன்னெடுக்கும்.
சத்ரியன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக