ஞாயிறு, 24 நவம்பர், 2013

இலங்கை அக­தியின் கர்ப்­பிணி மனை­விக்கு தமி­ழ­கத்தில் நேர்ந்த கொடூர சம்­பவம்!

தமி­ழ­கத்தில் இலங்கைத் தமிழ் அக­தி­யான கர்ப்­பிணிப் பெண்­ணுக்கு நேர்ந்த கொடூரம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. திருச்சி, இலங்கை அக­தி­க­ளுக்­கான சிறப்பு முகாமில் சோதனை என்ற பெயரில் காவல்­து­றை­யினர் ஒரு கர்ப்­பி­ணியை, நிர்­வா­ணப்­ப­டுத்­திய சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது.

தமி­ழ­கத்தில் பூந்­த­மல்லி, செங்­கல்­பட்டு, திருச்சி ஆகிய மூன்று இடங்­களில் சிறப்பு முகாம்கள் செயல்­ப­டு­கின்­றன. அவற்றில், திருச்சி முகா­மில்தான் இலங்கைத் தமிழ் அக­திகள் ஒருங்­கி­ணைப்­பாளர் ஈழ நேரு, இலங்கை நாதன், குணராஜ், பார்த்­திபன், சிவ­குமார் உள்­ளிட்ட 10 பேர் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

அங்கு தங்க வைக்­கப்​­பட்­டுள்ள சங்கர் என்­ப­வரைப் பார்ப்­ப­தற்­காக அவ­ரது மனைவி காவியா, (இரு­வரின் பெயர்­களும் மாற்­றப்­பட்­டுள்­ளன) கடந்த 20 ஆம் திகதி, காலை 11.20 மணிக்கு சென்­றுள்ளார். எஸ்.ஐ. ரவிச்­சந்­தி­ர­னிடம் காவியா மனுவைக் கொடுத்­துள்ளார். அப்­போ­துதான் குறித்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

காவியா நம்­மிடம் சொல்ல முடி­யாமல் அழும்­போது, நடந்­ததை விவ­ரித்தார் சங்கர்.

எனக்குப் பூர்­வீகம் ஆவு­டையார் கோவி­லுக்குப் பக்­கத்­தி­லுள்ள ஏம்பல் கிராமம். தொழி­லுக்­காக பெற்றோர் இலங்­கைக்குப் போன போது நான் பிறந்தேன். அதன்­பி­றகு 1997 இல் தமி­ழ­கத்­துக்கு வந்த என்னை, இரா­மேஸ்­வரம் மண்­டபம் அக­திகள் முகாமில் தங்க வைத்­தனர்.

அங்­கேயே சில வரு­டங்கள் இருந்த நான், அங்­கி­ருந்து வெளிப்­ப­திவில் முகா­மி­லி­ருந்து வெளி­யேறி, புதுக்­கோட்­டையில் தங்கி கூலி வேலை செய்தேன். இந்த நிலையில், இலங்­கையில் போர் தீவி­ர­மான சம­யத்தில் என் அம்மா, அப்பா, அக்கா உள்­ளிட்ட அனை­வரும் இறந்து விட்­டனர்.

யாரு­மற்ற நிலையில் இருந்த எனக்கு இவ­ளோட சிநே­கிதம் கிடைத்­தது. அதுவே காத­லாகி, திரு­மணம் செய்த, எங்­க­ளுக்குப் பெண் குழந்தை பிறந்­தது. இப்­போது என் மனைவி மீண்டும் கர்ப்­ப­மாக இருக்­கிறாள். என்­னைப்­போன்ற அக­திகள், அவுஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட வெளி­நா­டு­களில் குடி­யே­றினால், இரண்டே வரு­டங்­களில் குடி­யு­ரிமை கிடைப்­ப­தாகச் சொன்­னார்கள்.

என் குழந்­தை­க­ளா­வது படித்து ஆளாக வேண்டும் என்று அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்குப் செல்ல முயற்சி செய்தேன். இதைத் தெரிந்­து­கொண்ட கியூ பிராஞ்ச் பொலிஸார், கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி என்னை விசா­ர­ணைக்­காக அழைத்துப் போய், பொய்­யான வழக்குப் பதி­வு­செய்து புழல் சிறையில் அடைத்­தனர். அந்த வழக்கில் இரண்டு மாதங்­க­ளுக்குப் பிறகு பிணை கிடைத்­தது. ஆனால் சிறை­யை­விட்டு வெளியே வந்த என்னை கைது­செய்து, 25 நாட்­க­ளுக்கு முன் இந்த முகாமில் அடைத்­தனர்.

அன்று காலை 11.20 மணிக்கு முகா­முக்கு வந்த காவியா, எஸ்.ஐ. யிடம் என்னைப் பார்க்க மனு கொடுத்­துள்ளார். அதனை வாங்­கிய எஸ்.ஐ. அங்­கி­ருந்த பெண் காவ­லரைக் கூப்­பிட்டு, 'செக் பண்ணி அனுப்­புங்க என்று சொல்­லி­யி­ருக்­கிறார். பின்­பு­ற­முள்ள அறைக்கு காவி­யாவை அழைத்துச் சென்ற அந்தப் பெண் காவலர், சேலையைக் கழட்டு, ஜாக்­கெட்டைக் கழட்டு என்று மிரட்­டி­யி­ருக்கார். அரை­மணி நேரம் நிர்­வா­ண­மாக நிற்­க­வைத்து அனுப்­பினார்.

அழு­த­ப­டியே வந்து, உன்னைக் கல்­யாணம் பண்­ணிய குத்­தத்­துக்கு கோர்ட்டு, ஜெயில்ன்னு அலைய வெச்­சிட்டே. மிச்­ச­மி­ருக்­கி­றது மானம் மட்­டும்தான். இப்ப அதுவும் போச்சு. இப்­படி பொலிஸ் சித்­தி­ர­வதை செய்​தால் சாவதை தவிர வேறு வழி­யில்லை’ என்று கதறி அழுதாள்.

18 வரு­டங்­க­ளாக தமிழகத்தில் வாழ்ந்து வரும் என்மீது எந்த வழக்கும் கிடை யாது. இலங்கையில் நான் பிறந்த ஒரே காரணத்துக்காக என்னைச் சிறையில் தடுத்து வைத்துள்ள பொலிஸார், என் மனைவியையும் நிர்வாணமாக நிறுத்தி யிருக்கின்றனர் என்று கண்ணீருடன் தெரி வித்துள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல