ஞாயிறு, 8 டிசம்பர், 2013

ஏன் கடவுளின் பெயரால்....????

இந்த உலகத்தையே படைத்த ,எங்கும் வியாபித்திருக்கும் (தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்) கடவுளுக்கு எதுக்காக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள்?

கடவுளின் பெயரில் பல ஆயிரம் கோடி பணம் வங்கியில்?

சில ஏக்கர் பரப்பளவில் மாடமாளிகைகள் வானம் தொடும் கோபுரங்கள்?

பலகோடி பெறுமதியான தங்க, பவள ,இரத்தின கிரீடம், ஆபரணங்கள் ?

பால்,தேன், பன்னீர் அபிசேகங்கள் ?

தினமும் ஆறு வேளை தவறாமல் பல படையலோடு பூஜை?

அவருக்கேன் வருடந்தோறும் கல்யாணம்?

அவருக்கேன் தேவடியாள்கள்?

அவருக்கேன் தேரும் , திருவிழாவும்?

இவையனைத்தும் எதற்காக கடவுளுக்கு?
கடவுள் கேட்டாரா? இல்லை கடவுளின் பெயரில் கேட்கிறார்களா?

எடுப்பவன் கடவுளா? கொடுப்பவன் கடவுளா?
கடவுளை நம்புங்கள் மூடநம்பிகையை அல்ல கடவுளின் பெயரில் நடக்கும் வியாபாரத்தை பக்தி என்று நம்பி ஏமாறாதீர்கள்....

கடவுளை நம்புபவன் ,தன் பக்தியை நம்புபவனுக்கு இடைதரகர்கள் எதுக்காக???

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல