தென் ஆப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் மறைவு காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுரையின்படி தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவினையொட்டி இந்திய அரசு 5 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படுவதால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தியின் 68-வது பிறந்த நாளான நாளை (9-ந்தேதி) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுகிறது.
சோனியா காந்தி நலமுடன் நீடூழி வாழ அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக