ஞாயிறு, 8 டிசம்பர், 2013

சமூக விடு­த­லைக்­காக ஆயு­தத்தில் நம்­பிக்கை வைத்த போராளி, நல்­லி­ணக்­கத்தின் மூலம் வெற்றி பெற்று மாம­னி­த­ரா­னது எப்­படி?

நெல்சன் மண்டேலா - ஒரு சகாப்­தத்தின் முடிவு

இன்று மெய்­யான விடு­த­லைக்­காக ஏங்கி நிற்கும் எத்­த­னையோ சமூ­கங்கள் இருக்­கின்­றன. இன ரீதி­யான மற்றும் மத ரீதி­யான குழுக்கள் இருக்­கின்­றன. இத்­த­கைய சமூ­கங்­க­ளையோ, குழுக்­க­ளையோ பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் எவரும் மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஆகி­யோரின் வரி­சையில் மண்­டே­லாவின் வாழ்க்கை அனு­ப­வங்கள், அவர் காட்­டிய பாதை ஆகி­ய­வற்றின் தாக்­கத்தில் இருந்து தப்­பிக்க முடி­யாது என்­பது நிதர்­சனம்.

மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங் ஆகி­யோ­ரது போத­னைகள் அஹிம்­சையை அடித்­த­ள­மாகக் கொண்­டி­ருந்­தன. அவர்கள் ஆரம்பம் தொட்டு ஒடுக்­கு­மு­றைக்கும், துஷ்­பி­ர­யோ­கத்­திற்கும் எதி­ராக அஹிம்சை வழியில் போரா­டிய தலை­வர்கள். ஆனால் மண்­டே­லாவோ, தாம் கறுப்பர் என்­ப­தற்­காக தம்மை ஒதுக்­கிய ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் இருந்து விடு­தலை பெற வேண்­டு­மானால் அவர்­க­ளுக்கு எதி­ராக போர் தொடுப்­பதைத் தவிர வேறு வழி­யில்லை என்று ஆரம்­பத்தில் சிந்­தித்­தவர். இத்­த­கைய நிற ஒதுக்கல் ஆட்­சிக்கு எதி­ராக ஆயு­தப்­போராட்டம் நடத்தி உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக கெரில்லா குழு­வொன்றை வழி­ந­டத்­திய போராளி, பின்நாட்­களில் நல்­லி­ணக்கப் பாதையை தேர்ந்­தெ­டுத்து அதன் மூலம் வெற்றி பெற்­றமை தான் சிறப்­பம்சம்.

தென்­னா­பி­ரிக்­காவில் நிற ஒதுக்­கலை நிறு­வ­ன­ம­யப்­ப­டுத்­திய வெள்­ளை­யர்­களின் ஆட்சிக் கட்­ட­மைப்பில் கறுப்­பின மக்கள் எத்­த­கைய அவ­லங்­க­ளையும், கொடு­மை­க­ளையும், அவ­மா­னங்­க­ளையும் சந்­தித்­தி­ருப்­பார்கள் என்­பதை கற்­பனை செய்து பார்ப்­பதும் கடினம்.

வெள்­ளை­யர்கள் அனு­ப­விக்­கக்­கூ­டிய எந்­த­வொரு சலு­கையும், உரி­மையும் இந்த நிறு­வ­ன­ம­யப்­ப­டுத்தல் ஊடாக கறுப்­பர்­க­ளுக்கு மறுக்­கப்­பட்­டது. இவற்றில் வாக்­க­ளிப்பு உரி­மையும் உள்­ள­டங்கும். ஒரு நகரில் நடந்து செல்­லும்­போது வெள்­ளை­யர்­களின் பாதையில் ஒரு கறுப்­பி­னத்­தவர் குறுக்­கிட்டால் அல்­லது வெள்­ளை­யர்­க­ளுக்கு மரி­யாதை செலுத்தத் தவ­றினால், அவ­ருக்கு தண்­டனை வழங்­கக்­கூ­டிய சட்­டங்கள் ஊடாக நிற ஒதுக்கல் ஆட்சி நிறு­வ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்டு இருந்­தது.

இந்த ஆட்சி முறைக்கு எதி­ராக குரல் எழுப்­பி­ய­மைக்­காக தேசத்­து­ரோகக் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்டு 27 வரு­டங்கள் கடூ­ழிய சிறை­வாசம் அனு­ப­வித்த மனி­தரால், எவ்­வாறு நல்­லி­ணக்கம் பற்றி சிந்­திக்க முடிந்­தது என்­பதும், எவ்­வாறு புரிந்­து­ணர்வு, மன்­னிப்பு போன்ற நற்­கு­ணங்­களை முன்­னி­றுத்­திய நடை­மு­றையின் ஊடாக நிற ஒதுக்கல் ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைக்க முடிந்­தது என்­பதும் வியப்­புக்­கு­ரிய விட­யங்­களே.

இன ரீதி­யான வன்­மு­றைகள், பொலி­ஸாரின் அடக்­கு­மு­றைகள் போன்­ற­வற்றால் இரத்­தக்­கறை படிந்­தி­ருந்த தென்­னா­பி­ரிக்­காவின் அர­சியல் வர­லாற்றை மாற்­றி­யெ­ழுதி, மிகவும் சிறப்­பா­ன­தொரு அர­சியல் யாப்­பிற்கு உரிமை கொண்­டாடும் ஜன­நா­யக நாடாக பரி­ண­மிக்க வைத்த நிலை­மாற்றம் தனி­ம­னி­தரால் எவ்­வாறு சாத்­தி­யப்­பட்­டது என்­பதும் தவிர்க்க முடி­யாத கேள்வி. மண்டேலாவின் சரி­யான கொள்­கைகள், அந்தக் கொள்­கைகள் மீதான திட­சங்­கற்பம், அதன் அடிப்­ப­டையில் அவர் தேர்ந்­தெ­டுத்த பாதை, அந்தப் பாதையில் இருக்கும் தடைக்­கற்கள் மற்றும் திருப்­பங்கள் பற்­றிய புரிந்­து­ணர்வு போன்­ற­வற்றின் மூலம் அது சாத்­தி­யப்­பட்­ட­தாகக் கூற முடியும்.

இங்கு அஹிம்சை என்ற கொள்­கையும், அதன் மீதான திட­சங்­கற்­பமும் மண்­டே­லாவின் வெற்­றிக்­கு­ரிய அடித்­த­ளத்தை அமைத்துக் கொடுத்­தன என்றால், அதில் மிகை­யில்லை. வன்­மு­றை­களைக் கைவிட வேண்­டு­மென எந்தத் தரு­ணத்தில் அவர் சிந்­தித்­தாரோ, அந்தத் தரு­ணத்தை பொன்­னான தரு­ண­மாகக் குறிப்­பிட முடியும்.

கால­னித்­துவம், ஒதுக்­கி­வைத்தல், அடிப்­படை ஜன­நா­யக உரி­மை­களை மறுத்தல் போன்­ற­வற்றின் மூலம் வெள்­ளை­யர்கள் கறுப்­பர்­களை ஒடுக்கி வைத்­த­மைக்கு காரணம் இன ரீ­தி­யான சிந்­த­னைகள் தானென்றால், அந்த சிந்­த­னை­களைக் கொண்­ட­வர்­க­ளி­டமும் மனிதம் உண்­டென்­பதை மண்­டேலா கண்­டு­பி­டித்தார். அந்தக் கண்­டு­பி­டிப்பு தான் மண்­டே­லாவை மாம­னி­த­னாக மாற்­றி­யது எனலாம்.

பல மகோன்­னதத் தலை­வர்­களைப் போன்று அவ­ரது தனிப்­பட்ட வாழ்க்­கையில் பல பிரச்சி­னைகள் இருந்­தி­ருக்­கலாம். ஆனால், கறுப்­பி­னத்­த­வர்கள். இந்­தி­யர்கள், வெள்­ளைக்­கா­ரர்கள் என்ற பார­பட்சம் இல்­லாமல் தாம் சந்­தித்த மனி­தர்­களை நம்­பிக்­கை­யுடன் எதிர்­கொண்டு அன்­பாகப் பழ­கிய அவ­ரது நற்­குணம் தான், அத்­தனை சாத­னை­க­ளுக்கும் அடித்­த­ள­மாக அமைந்­தது.

எவ­ரேனும் ஒரு­வரை மண்­டேலா சந்­திப்­பா­ரானால், தாம் உயர்ந்­தவன் என்று அந்த மனி­தனை எண்ண வைக்கும் ஆற்றல் மண்­டே­லா­விற்கு இருந்­தி­ருக்­கி­றது. வெள்­ளை­யின நிற ஒதுக்கல் ஆட்சிக் காலத்தில் தென்­னா­பி­ரிக்­காவின் ஜனா­தி­ப­தி­யாக இருந்த பிரெட்ரிக் வில்­லியம் டி கிளார்க்­குடன் பேச்­சு­வார்த்தை நடத்தி பல இனத்­த­வர்­களும் பங்­கேற்­கக்­கூ­டிய தேர்­தலை நடத்­து­வ­தற்கு வழி­வ­குக்க அவரால் முடிந்­த­தது என்றால், மனிதம் என்ற மாபெரும் சக்­தியின் மீது அவர் வைத்த நம்­பிக்கை தான் கார­ண­மாகும்.

பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்ட சம­யத்­திலும் தமது கொள்­கைகள் மீதான நம்­பிக்­கையை அவர் இழக்­க­வில்லை. கடந்த காலத்தில் தமது மக்­க­ளுக்கு எதி­ராக இழைக்­கப்­பட்ட கொடு­மை­களை மண்­டேலா மறக்­க­வில்லை. ஆனால், அந்தக் கொடு­மைகள் பற்­றிய கோபா­வேசம் எதிர்­கால சட்­ட­திட்­டங்­க­ளுக்கு தூண்­டு­த­லாக அமை­யக்­கூ­டாது என்­பதில் அவர் பிடி­வா­த­மாக இருந்தார்.

சகல நிறங்­களும் அணி­சேர்ந்து அழகு தரும் வானவில் போல ஒன்­றுக்­கொன்று ஒத்­தி­சைந்து செல்லும் இனக்­கு­ழு­மங்­களின் அடித்­த­ளத்தில் உரு­வான வானவில் தேச­மாக தென்­னா­பி­ரிக்கா அமைய வேண்டும் என்­பது அவ­ரது சிந்­த­னை­யாக இருந்­தது. இதற்­காக கடந்த கால தவ­று­களை மறந்து தவ­று­களால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை ஓரங்­கட்டி விட வேண்­டு­மென மண்­டேலா சிந்­திக்­க­வில்லை. மாறாக, தவ­றுகள் மூலம் பாடம் படித்து எதிர்­காலப் பய­ணத்தை சரி­யான பாதையில் செலுத்­து­வ­தற்­காக உண்மை மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை ஸ்தாபித்தார்.

மனி­தனின் ஆழ்­மன வேட்­கைகள் பற்­றிய அவ­ரது பட்­ட­றிவும் நல்­லி­ணக்க நடை­மு­றைக்கு உறு­து­ணை­யாக அமைந்­தது. தமது சிறைக்­கூ­டத்தில் ஓய்வைக் கழிக்கும் கைதிகள் காற்­பந்­தாட்­டத்தின் மீது காட்­டிய ஆர்­வத்தை அவர் அவ­தா­னித்தார். விளை­யாட்டின் மூல­மாக ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­தலாம் என்ற நம்­பிக்கை அவ­ருக்கு ஏற்­பட்­டது. நிற ஒதுக்கல் ஆட்­சி­கா­லத்தில் வெள்­ளை­யின அணி­களில் கறுப்­பர்­க­ளுக்கு இட­மில்லை. இந்த நிலையில் 1995ஆம் ஆண்டு தென்­னா­பி­ரிக்கா உலக ரக்பி சுற்­றுத்­தொ­டரை நடத்­தி­ய­போது, வெள்­ளை­யர்­க­ளுடன் கறுப்­பி­னத்­த­வர்­க­ளையும் சேர்த்து விளை­யாடச் செய்தார். ரக்பி என்­பது வெள்­ளை­யர்­க­ளுக்கு பிரி­ய­மான விளை­யாட்டு. அதில் கறுப்­பின வீரர்­களை விளை­யா­டு­மாறு நிர்ப்­பந்­தித்த அவ­ருக்கு உலகக் கிண்ணம் மாத்­திரம் கிடைக்­க­வில்லை. வேறெ­த­னையும் விட விளை­யாட்டின் ஊடாக நல்­லி­ணக்கம் சிறப்­பாக சாத்­தி­யப்­படும் என்ற நம்­பிக்­கை­யு­ட­னான வெற்­றியும் கிடைத்­தது. உலக வெற்­றிக்­கிண்­ணத்தை ரக்பி அணியின் வெள்­ளை­யினத் தலை­வ­ரிடம் கைய­ளித்து அவ­ரது தோளில் மண்­டேலா கைபோட்டு அள­வ­ளா­வு­வதை சித்­த­ரிக்கும் புகைப்­ப­டத்தில் வெளிப்­படும் மனி­த­நேயம் பற்றி பேசாத மனி­த­நேய சிந்­த­னை­யா­ளர்­களைக் காண்­பது கடினம்.

நெல்சன் மண்­டேலா அதி­கா­ர­பீ­டத்தில் அமர்ந்­தி­ருந்த காலம் குறு­கி­யது. அவர் அதி­கா­ரத்தால் சாதித்­ததை விட அன்பால் சாதித்­தது அதிகம் என்­பதால் தான் அமெ­ரிக்­காவும், ரஷ்­யாவும் அவரை ஒருங்கே பாராட்ட முடிந்­தது. அவ­ருக்கு சமா­தா­னத்­திற்­கான நோபல் பரிசும் கிடைத்­தது எனலாம். மண்­டே­லாவின் வாழ்க்கைச் சரி­தத்தைப் புரட்டிப் பார்ப்­ப­வர்­க­ளுக்கு இவை­யெல்லாம் சிறு­தூசு என்­பதை உணர முடியும்.

இன ரீதி­யான, மத ரீதி­யான, சமூக ரீதி­யான வெறுப்­பு­ணர்­வுக்குக் காரணம் சுய­நலம் மாத்­தி­ர­மல்ல. அடுத்­த­வர்கள் மீதான அச்சம், நம்­பிக்­கை­யீனம், புரிந்துணர்வு இன்மை போன்றவையும் தான் என்பதை இந்த மாமனிதர் புரிந்து வைத்திருந்தார். மற்ற மனிதர்கள் மீது அச்சம் கொள்ளத் தேவையில்லை என்பதை சிந்தனையிலும், கொள்கையிலும், செயலிலும் நிரூபித்துக் காட்டினார். வெறுமனே அதிகாரத்தை நிலைநாட்டுவதை விட நேர்மையும், புரிந்துணர்வும் சிறந்தது என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார். பழிவாங்கலுக்கு பதிலாக சகிப்புத்தன்மை வெற்றிகளைத் தரும் என்பதை நடைமுறையில் வெளிப்படுத்தி நின்றார்.

தனிநபர்கள் மத்தியில் மாத்திரமன்றி இன, மத குழுக்கள், சமூகங்கள், நாடுகள், பிராந்தியங்கள் மத்தியில், நம்பிக்கையீனம், வெறுப்பு, காழ்ப்புணர்ச்சி, குரோதம் போன்றவை மலிந்து கிடக்கும் சமகால உலகில் நெல்சன் மண்டேலாவின் கொள்கைகளும், கோட்பாடுகளும், செல்நெறியும் முன்னெப்போதையும் விட முக்கியத்துவம் பெறுகின்றன என்றால் அது மிகையில்லை. அந்த மாமனிதர் காட்டிய உதாரணங்கள் எந்தவொரு தேசத்திற்கும், சமூகக் கட்டமைப்பிற்கும் பொருந்தி வரக் கூடியவை என்பதை மறைவிற்குப் பின்னர் அவருக்கு சூட்டப்படும் புகழ் மாலைகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

சதீஷ் கிருஷ்ணபிள்ளை
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல