கடந்த 20வருடங்களுக்கு மேலாக நெடுந்தீவில் இராணுவத்தினரின் துணைக்குழுவாக நிலைகொண்டிருந்த ஈ.பி.டி.பி நேற்று அங்கிருந்த அலுவலகத்தை மூடிவிட்டு வெளியேறினர். ஆனால் ஈ.பி.டி.பியினரை வெளியேற வேண்டாம் என அங்குள்ள சில பெண்கள் அழுது விழுது ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
ஈ.பி.டி.பியினரே தங்களுக்கு வாழ்வு கொடுத்ததாகவும் அவர்கள் இல்லாமல் தங்களால் வாழ முடியாது என அப்பெண்கள் தெரிவித்துள்ளனர். ஈ.பி.டி.பியினரே வெளியேறி எங்களுக்கு தண்டனை தராதீர்கள், நீங்கள் தான் எமக்கு துணை, போகாதே போகாதே என் கணவா என கதறி அழுதனர்.
இவர்களுடன் ஈ.பி.டி.பியினரால் அழைத்து வரப்பட்ட ஆண்கள் சிலரும் ஈ.பி.டி.பியினரை போக வேண்டாம் என பதாகைகளை பிடித்திருந்தனர்.
20வருடங்களுக்கு மேலாக ஈ.பி.டி.பியினர் அங்கு நிலைகொண்டிருந்ததால் ஈ.பி.டி.பியினரின் சந்ததி ஒன்றும் அங்கு உருவாகியுள்ளது. சில இளைஞர்களும் தமது தந்தைமாரை செல்ல வேண்டாம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நெடுந்தீவிலிருந்து ஈ.பி.டி.பியினர் வெளியேறுவதினால் அங்குள்ள பெண்கள் சிலர் கவலையும் வேதனையும் அடைந்துள்ள போதிலும் நெடுந்தீவில் உள்ள ஆண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களில் பலர் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை நெடுந்தீவில் குறிப்பிட்ட ஒரு சில பெண்களே ஈ.பி.டி.பியினரின் வெளியேற்றத்தால் கவலை அடைந்திருந்தாலும் பெரும்பாலான ஒழுக்கம் உள்ள தமிழ் பெண்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கொடியவர்கள் கொலைகாரர்கள் வெளியேறி விட்டார்கள் என நிம்மதி அடைந்துள்ளார்கள். தங்களையும் தங்களது வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளையும் ஈ.பி.டி.பியினரிடமிருந்து காப்பாற்றுவதற்கு தாம் தினம் தினம் போராடி வந்ததாகவும் இன்று தற்போது அதற்கு விடிவு கிடைத்துள்ளதாகவும் அப்பெண்கள் தெரிவித்துள்ளனர்.
ஈ.பி.டி.பியினரால் சிறுமிகள் கூட வீட்டை விட்டு வெளியே நடமாட முடியாத சூழல் நெடுந்தீவில் காணப்பட்டதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
நெடுந்தீவு 6ஆம் வட்டாரத்தில் 2012ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் திகதி 12வயது மாணவி லக்சனாவை ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் கிருபா என்பவரே பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தார். பொதுமக்களால் அடையாளம் காணப்பட்டு மடக்கி பிடிக்கப்பட்டு காவல்துறையில் ஒப்படைக்கப்பட்ட இந்நபர் தற்போது விடுதலையாகி சுதந்திரமாக நடமாடி வருகிறார்.
இந்நபர் பத்திரிகையாளர் நிமலராஜன் படுகொலையில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் ஒருவர் என்றும் பிணையில் விடுவிக்கப்பட்ட இவர் நெடுந்தீவில் சென்று அங்கு தங்கியிருந்ததுடன் நீதிமன்ற விசாரணைகளுக்கும் சமூகமளிக்காது வந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நபர் துப்பாக்கி முனையில் இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதுடன் அவர்களது மார்புகளை கடித்த குற்றச்சாட்டில் ஊர்காவற்றுறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இதன்போது இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தி தினமும் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்து போடுகின்றார் என்பதோடு நெடுந்தீவில் ஈ.பி.டி.பி யின் மிகச் செல்வாக்கு மிக்க நபராகவும் இவர் விளங்கி வந்தார்.
இதேவேளை கடந்த ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி மண்டைதீவில் குணராசா சுடரினி என்ற சிறுமியை இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பியினரே பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஈ.பி.டி.பியை சேர்ந்த 31வயதுடைய நபர் ஒருவரை புலனாய்வு பொலிஸார் கைது செய்திருந்த போதிலும் அரசியல் செல்வாக்கு காரணமாக இவர் விடுவிக்கப்பட்டார்.
தீவுப்பகுதியில் கொலை கொள்ளை பாலியல் பலாத்காரங்களில் ஈடுபட்டு வந்த ஈ.பி.டி.பியினரின் பிடி தற்போது அங்கு தளர்ந்து வருவதையே ஈ.பி.டி.பியினரின் நெடுந்தீவு வெளியேற்றம் உணர்த்துவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நெடுந்தீவில் உள்ள சில பெண்கள் ஈ.பி.டி.பியினர் வெளியேறியதை அடுத்து அவர்களும் வெளியேறி ஈ.பி.டி.பியினர் தங்கியிருக்கும் இடங்களை தேடி சென்றுள்ளனர்.

Thinakkathir

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக