ஞாயிறு, 8 டிசம்பர், 2013

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் தவிக்கும் உக்ரேன்

1917இல் ரஷ்யப் பேர­ரசின் வீழ்ச்­சிக்குப் பின்னர் 1918இல் ரஷ்­யா­வி­ட­மி­ருந்து விடு­தலை பெற்ற உக்ரேன் மீது 1922இல் பொது­வு­டைமை ரஷ்யா படை­யெ­டுத்­தது. இதைத் தொடர்ந்து ரஷ்யா தலை­மையில் சோவியத் ஒன்­றி­யத்தில் உக்ரேன் மீண்டும் இணைந்து கொண்­டது. சோவியத் ஒன்­றி­யத்தில் உக்ரேன் ஒரு முக்­கிய நாடாக இருந்­தது. சோவியத் ஒன்­றிய நாடு­களை ரஷ்யா சுரண்டிக் கொண்­டி­ருக்­கி­றது என்ற குற்றச்சாட்டும் இருந்தது. உக்­ரே­னிற்கு அப்­போது பிரிந்து போகும் சுய­நிர்­ணய உரிமை இருந்­ததா? இப்­போது தனி நாடா­கிய பின்­னரும் ரஷ்­யா­வி­ட­மி­ருந்து விலகிச் செல்லும் உரிமை உக்­ரே­னிற்கு இருக்­கி­றதா? இது போன்ற கேள்­விகள் இப்­போது எழுந்­துள்­ளன. 

ஸ்டாலி­னிற்கும் ஹிட்­ல­ருக்கும் இடையில் உக்ரேன்.

1932-ஆம் 1933ஆ-ம் ஆண்­டு­களில் உக்­ரேனில் முப்­பது இலட்சம் முதல் அறு­பது இலட்சம் மக்கள் பட்­டினி போட்டுக் கொல்­லப்­பட்­டனர். இது ஜோசப் ஸ்டாலின் செய்த இனப்படு­கொலை என வாதி­டு­வோரும் உண்டு. 1937இல் பல உக்­ரே­னிய அறி­ஞர்கள் சோவி­யத்தால் கொல்­லப்­பட்­டனர். 1941இல் ஹிட்­லரின் நாஸிப் படைகள் சோவி­யத்தின் மீது படை எடுத்தபோது ஐம்­பது இலட்சம் உக்­ரே­னி­யர்கள் கொல்­லப்­பட்­டனர்.

ஹிட்­லரின் படைகள் தோற்­க­டிக்­கப்­பட்டு சோவி­யத்தில் இருந்து விரட்­டப்­பட்ட பின்னர் நாஸிப் படை­யி­ன­ருடன் ஒத்­து­ழைத்­தார்கள் எனக் குற்றம் சாட்டி இரண்டு இலட்சம் உக்­ரே­னி­யர்கள் சைபீ­ரி­யா­விற்கு நாடு­க­டத்­தப்­பட்­டனர். சோவியத் ஒன்­றி­யத்­திற்கு எதி­ரான உக்­ரே­னி­யர்­களின் விடு­தலைப் போராட்டம் 1954இல் அடக்­கப்­பட்­டது. 1991இல் சோவியத் ஒன்­றியம் வீழ்ச்­சி­ய­டைந்த பின்னர் உக்ரேன் விடு­தலை பெற்­றது.

தோடம்­பழப் புரட்சி -  Orange Revolution

2004ஆம் ஆண்டு உக்­ரேனில் தொடர்ச்­சி­யாக நடந்த மக்கள் எழுச்சி தோடம்­பழப் புரட்சி என அழைக்­கப்­பட்­டது. இதைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு உக்­ரேனில் மக்­க­ளாட்சி முறைப்­படி தேர்தல் நடந்­தது. அதில் விக்டர் யுவோ­னோவிச் வென்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டது. தேர்­தலில் முறைகேடு நடந்­த­தாக மேற்கு நாடுகள் குற்றம் சாட்­டின. எதிர்க்­கட்­சிகள் மக்­களைத் திரட்டிப் பெரும் ஆர்ப்­பாட்டம் செய்­தன. உச்ச நீதிமன்றம் தேர்தல் செல்­லு­ப­டி­யற்­றது என்­றது. மறு தேர்­தலில் யுலியா ரைமொ­ஷென்கோ வெற்றி பெற்றார். 2005ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் அவ­ரது ஆட்­சியை குடி­ய­ரசுத் தலை­வ­ராக இருந்த விக்டர் யுஷென்கோ கலைத்தார். இதைத் தொடர்ந்து உக்­ரேனில் பல அர­சியல் இழு­ப­றிகள், கூட்­ட­ணிகள் அரங்­கே­றின. 2011ஆம் ஆண்டு முன்னாள் தலைமை அமைச்சர் யுலியா ரைமொ­ஷென்கோ சிறையில் அடைக்­கப்­பட்டார்.



மோச­மான உக்­ரே­னியப் பொரு­ளா­தாரம்.

2008ஆம் ஆண்டு உல­கெங்கும் ஏற்­பட்ட பொரு­ளா­தார நெருக்­கடி உக்­ரே­னையும் பெரிதும் பாதித்­தது. உருக்கு ஏற்­று­ம­தியில் பெரிதும் தங்­கி­யி­ருக்கும் உக்­ரே­னியப் பொரு­ளா­தாரம் உருக்­கிற்­கான கேள்வி உலகச் சந்­தையில் குறைந்­ததால் ஆட்டம் கண்­டது. 2006ஆம் ஆண்டு ரஷ்யா, தான் உக்­ரே­னிற்கு வழங்கும் எரி­வா­யுவின் விலையை கண்­ட­படி உயர்த்­தி­யது. இது தனது பிடியில் இருந்து உக்­ரேயின் வில­கு­வற்கு எதி­ரான ரஷ்­யாவின் நட­வ­டிக்­கை­யாகக் கரு­தப்­பட்­டது.

2009-இல் ரஷ்­யா­விற்கு உக்ரேன் செலுத்த வேண்­டிய எரி­வா­யு­விற்­கான கொடுப்­ப­ன­வு­களைச் செலுத்­தாத படியால் ரஷ்யா தனது எரி­வாயு வழங்­கலை நிறுத்­தி­யது. பின்னர் இரு நாடு­களும் பத்து ஆண்­டுகள் எரி­வாயு வழங்­க­லுக்­கான ஒப்­பந்தம் செய்து கொண்­டன. பின்னர் 2010இல் உக்­ரே­னியத் துறை­மு­கங்­களை ரஷ்யா பாவிப்­ப­தற்கு அனு­ம­தித்­த­மைக்குப்பதி­லாக மலிவு விலையில் ரஷ்யா உக்­ரே­னிற்கு எரி­வாயு வழங்க ஒத்துக் கொண்­டது.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திற்கும் ரஷ்­யா­விற்கும் இடையில் உக்ரேன்.

ரஷ்­யாவும் உக்­ரேனும் மேற்கு ஐரோப்­பியக் கலா­சா­ரத்தை ஒத்­த­வை­யாக இருந்த போதிலும் உக்­ரே­னியக் கலா­சாரம் ரஷ்­யா­வுடன் அதிகம் ஒத்துப் போவ­தாக இருக்­கி­றது. நீண்­ட­காலம் இரண்டும் சோவியத் ஒன்­றி­யத்தில் இருந்தபடியால் இப்­படி இருக்­கலாம். ரஷ்­யாவும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துடன் இணை உறுப்­பி­ன­ராக இணைய விரும்­பி­யி­ருந்­தது. உக்­ரேன் சிறிது சிறி­தாக ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துடன் தனது வர்த்­த­கத்தை மேம்­ப­டுத்தத் தொடங்­கி­யதால் ஆத்­தி­ர­ம­டைந்த ரஷ்யா, 2013ஜூலை மாதம் உக்­ரேனில் இருந்து சொக்லட் இறக்­கு­மதி செய்­வதைத் தடை செய்­தது.

ஐரோப்­பிய ஒன்­றியம் உக்­ரே­னுடன் வரி­யற்ற ஒரு வர்த்­தக உடன்­ப­டிக்­கையைச் செய்ய முயன்­றது. போலந்து, பல்­கே­ரியா, ருமே­னியா, ஹங்­கேரி, லத்­வியா, லித்­து­வே­னியா போன்ற முன்னர் ரஷ்­யாவின் ஆதிக்­கத்தில் இருந்த நாடு­க­ளுடன் இப்­படிப்பட்ட ஒப்­பந்தம் முதலில் செய்து பின்னர் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் முழு­மை­யாக இணைந்து கொண்­டது. இதை ரஷ்யா வேறு­வி­த­மாகப் பார்க்­கி­றது.

முன்னர் ஹிட்லர் படை­ப­லத்தின் மூலம் சாதிக்க முடி­யா­ததை இப்­போ­தைய ஜேர்­மனி, பொரு­ளா­தார ஒத்­து­ழைப்பு என்ற போர்­வையில் சாதிக்­கி­றது என ரஷ்யா கரு­து­கி­றது. உக்­ரேன் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் இணைந்தால் அது தனது சந்­தையை மேலும் சிறி­ய­தாக்கும். அத்­துடன் படைத்­துறை ரீதியில் உக்ரேன் ரஷ்­யா­விற்கு கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாகும்.

புட்­டினின் புதிய ரஷ்யா

தன்னை உல­கி­லேயே அதிக செல்வம் மிக்க அரசுத் தலை­வ­ராக்­கிய விளா­டிமிர் புட்டின், ரஷ்­யாவை ஒரு புதிய பாதையில் கொண்டு செல்ல முயல்­கின்றார். ரஷ்­யாவின் பெருமை மிக்க வர­லாறு 1917இல் நடந்த பொது­வுடைமைப் புரட்­சி­யுடன் தொடங்­க­வில்லை. அதற்கு முன்­னரே உலக அரங்கில் ரஷ்­யா­விற்கு என்று ஒரு பெருமை மிக்க நிலை இருந்­தது என்­கிறார் புட்டின்.

1991இல் நடந்த சோவியத் ஒன்­றிய வீழ்ச்சி இரு­பதாம் நூற்­றாண்டில் நடந்த மோச­மான புவிசார் கேந்­தி­ரோ­பாய நிகழ்வு என்­கிறார் புட்டின். சோவியத் ஒன்­றிய வீழ்ச்­சிக்குப் பின்னர் உலக அரங்கில் ஒரு மட்­டுப்­ப­டுத்தப்பட்ட ஆதிக்­கத்தைச் செலுத் திவந்த ரஷ்யா, 2012ஆம் ஆண்­டி­லி­ருந்து உலக அரங்கில் தனது ஆதிக்­கத்தை மீள் நிலைநிறுத்த முயல்­கின்­றது.

அதன் ஓர் அம்­ச­மாக சிரி­யாவின் இர­சா­யன குண்­டுகள் பாவித்­த­மைக்­கான ஆதா­ரங்கள் கிடைத்த பின்னர் சிரி­யா­மீது அமெ­ரிக்கா தாக்­குதல் நடத்­து­வதைக் கடு­மை­யாக எதிர்த்துத் தடுத்­தது. அடுத்­த­தாக அது, உக்ரேன் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துடன் இணை­வதைக் கடு­மை­யாக எதிர்க்­கி­றது. விள­டிமிர் புட்டின் உக்ரேன் மக்­களின் எழுச்­சியை ஓர் அழிப்பு நட­வ­டிக்கை என விமர்­சித்தார்.

பிள­வு­பட்ட உக்ரேன்

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துடனான வர்த்­தக ஒப்­பந்­தத்தை உக்­ரேன் ஆட்­சி­யா­ளர்கள் மீது அழுத்தம் கொடுத்து ரஷ்யா தடுத்­தது. இதை எதிர்த்து மூன்று இலட்சம் உக்­ரே­­னி­யர்கள் தெருக்­களில் இறங்கிப் போராடிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவர்கள் மீது கடு­மை­யான அடக்­கு­முறை கட்­ட­விழ்த்து விடப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பாகக் கருத்துத் தெரி­வித்த ஐக்­கிய அமெ­ரிக்­காவின் வெளி­யு­ற­விற்குப் பொறுப்­பான அதன் அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரி, புதிய ஐரோப்­பாவில் வன்­மு­றைக்கு இட­மில்லை என்றார். இது ஐரோப்­பா­வுடன் உக்ரேன் இணைக்­கப்­பட்டு ரஷ்­யா­வைவைப் பல­வீனப்படுத்­து­வதை அமெ­ரிக்­காவும் விரும்­பு­கி­றது எனக் காட்­டு­கின்­றது. ஆனால், நடு நிலை­யான நோக்­கு­னர்­களின் கருத்­துப்­படி உக்­ரே­னிய மக்கள் இரு கூறாகப் பிரிந்து நிற்­கின்­றார்கள். இரு­த­ரப்பும் எண்­ணிக்கை அடிப்­ப­டையில் ஏறக்­கு­றைய சம­மா­ன­வர்­களே.

ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராகக் கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மானம் உக்­ரே­னிய நாடா­ளு­மன்­றத்தில் தோற்­க­டிக்­கப்­பட்­டது. வயது அடிப்­ப­டையில் பார்க்­கையில் இள­வ­ய­தினர் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துடன் இணை­வதை விரும்­பு­கின்­றனர்.

முதி­ய­வர்கள் ரஷ்­யா­வுடன் ஒத்­து­ழைப்­பதை விரும்­பு­கின்­றனர். பிராந்­திய அடிப்­ப­டையில், கிழக்குப் பிராந்­தி­யத்தைச் சேர்ந்­த­வர்கள் ரஷ்­யா­வையும் மேற்குப் பிராந்­தி­யத்­தினர், ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தையும் விரும்­பு­கின்­றனர். சில அறி­வா­ளிகள் ரஷ்யா உக்­ரே­னிற்கு மீன் கொடுக்­கி­றது என்றும் ஐரோப்­பிய ஒன்­றியம் மீன் பிடிக்கும் கரு­வியைக் கொடுக்­கி­றது என்றும், இரண்­டா­வது, நீண்­ட­கால அடிப்­ப­டையில் நன்மை பயக்கக் கூடி­யது என்றும் குறிப்­பி­டு­கின்­றனர். அத்­துடன் ரஷ்யா இனி­வரும் காலங்­களில் பல பொரு­ளா­தார நெருக்­க­டி­களைச் சந்­திக்­கலாம் என பலரும் கரு­து­கின்­றனர். வட அமெ­ரிக்­காவில் அதிக எரி­பொருள் வளம் கண்டு பிடிக்­கப்­பட்­டமை, ரஷ்­யாவின் முக்­கிய வரு­மானம் ஈட்டும் எரி­பொருள் ஏற்­று­ம­தியை இனிப் பெரிதும் பாதிக்­க­வி­ருக்­கி­றது.

ரஷ்­யாவின் புதிய ஒன்­றியம்.

ஐரோப்­பிய ஒன்­றியம் உக்­ரே­னிற்கு ஐம்­பது கோடி மக்கள் கொண்ட தனது சந்­தையைத் திறந்து விடவும் உக்­ரே­னி­யர்கள் விசா நடை­முறை இன்றி ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­க­ளுக்கு செல்ல அனு­ம­திப்­பதும், வரிகள் குறைந்த ஏற்­று­ம­தியும் இப்­படிப் பல சலு­கை­களை வழங்க முன்­வந்­தது. ரஷ்யா, தான் பெலரஸ், கஜகஸ்தான், கிர்­கிஸ்த்தான், தஜகஸ்தான் ஆகிய நாடு­களை இணைத்து அமைக்­க­வி­ருக்கும் யூரோ – -­ஆ­சிய ஒன்­றி­யத்தில் உக்­ரேனும் இணைந்து கொள்ள வேண்டும் என விரும்­பு­கி­றது.

இந்த ஒன்­றியம் உக்ரேன் இல்­லாமல் முற்றுப் பெற­மாட்­டாது என நம்­பப்­ப­டு­கின்­றது. இந்த ஒன்­றியம் மத்­திய ஆசி­யாவில் ஒரு புதிய பிராந்­திய அர­சியல் போட்­டியை உரு­வாக்கும். மத்­திய ஆசி­யாவில் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­னதும் சீனாவினதும் சந்தைவாய்ப்புக்களைப் பறிக்கும். இதனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உக்ரேனை தம்முடன் இணைப்பதில் அதிக முனைப்புக் காட்டுகின்றன.

உக்ரேனியக் கிளர்ச்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தூபமிடுகின்றது என்ற ஐயத்திற்கு இது வலுச் சேர்க்கின்றது. ரஷ்யாவின் யூரோ – -ஆசிய ஒன்றியம் பல நாடுகளை மீள் சோவியத் மயமாக்கும் முயற்சி என்றார் அமெரிக்காவின் முன்னாள் அரசுத் துறைச் செயலர் ஹிலரி கிளிண்டன். அமெரிக்க ஊடகங்கள் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனைச் சரியாகக் கையாளவில்லை எனக் குற்றம் சாட்டுகின்றன. "உக்ரேன் மக்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தட்டும், பின்னர் உலக அரங்கில் வேறு நாடுகளுடன் இணைவதைப்பற்றிச் சிந்திக்கட்டும்" இது ஓர் உக்ரேனிய வயோதிப இல்லத்தரசி ஊடகம் ஒன்றிற்கு உக்ரேன் மக்களின் கிளர்ச்சி பற்றிக் கூறிய கருத்து. இதில் நிறைய உண்மை இருக்கின்றது.


வேல் தர்மா                                                      Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல