ஞாயிறு, 8 டிசம்பர், 2013

உலகின் உன்னத தலைவர் நெல்சன் மண்டேலா!

தென் ஆபி­ரிக்­காவின் சுதந்­திரப் போராட்ட வீர­ரும், கறுப்­பினத் தலை­வ­ரு­மான நெல்சன் மண்­டேலா தனது 95 ஆவது வயதில் வியா­ழனன்று கால­மானார். கடந்த சில மாதங்­க­ளாக உடல்­நலக் குறைவு கார­ண­மாக அவ­திப்­பட்டு வந்தார். அவரின் மர­ணத்தை அந்­நாட்டின் தற்­போ­தைய ஜனா­தி­ப­தி­யான ஜேக்கப் சூமா அறி­வித்தார்.

தென் ஆபி­ரிக்­காவின் 80 ஆண்­டு­கால இன­வெறிக் கொள்­கையை எதிர்த்து நீண்­ட­தொரு போராட்டம் நடத்தி அதில் வெற்றி பெற்­றது மட்­டு­மல்­லாமல், அந்­நாட்­டுக்கே ஜனா­தி­ப­தி­யாகி வர­லாற்றில் இடம் பிடித்­தவர் மண்­டேலா. உல­க­ளவில் 250 விரு­து­களைப் பெற்­றுள்ளார். இதில் 1993 இல் சமா­தா­னத்­திற்­கான நோபல் பரி­சையும் வென்றார்.

இன­வெ­றிக்கெதிரா­கப் போரா­டிய மாபெரும் தலைவர், விடு­த­லைக்­கான குறி­யீ­டாக எல்­லோ­ராலும் கரு­தப்­பட்­டவர். இவை எல்­லா­வற்­றையும் விட சிறந்த மனிதன் இன்று எம் மத்­தியில் இருந்து விடை­பெற்று விட்டார். இவ­ரை­ வி­டவும் ஓர் உன்­னத தலைவன் இப் பாரினில் பிறப்­பாரா என்­பது கேள்விக் குறியே? இவரின் பிரிவை தாங்­காமல் முழு உல­கமே இன்று கண்ணீர் வடித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது.

அகி­லமே மதிக்கும் மாபெரும் தலை­வர்­களில் ஒரு­வ­ராக இவர் விளங்­கினார். தென் ஆபி­ரிக்­காவில் நிற­வெ­றிக்கு எதி­ராகப் போராடி ெவள்ளையர்­க­ளி­ட­மி­ருந்து கறுப்­பி­னத்­த­வர்­க­ளுக்கு விடு­தலை பெற்­றுக் ­கொ­டுத்த மாபெரும் தலை­வ­ராவார். விடு­தலைப் போராட்ட வீர­ரான இவர் தென் ஆபி­ரிக்­காவின் முத­லா­வது கறுப்­பின ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்­றதன் மூலம் ெவள்ளையர்­களின் நிற­வெறி ஆட்­சியை ஒழித்து சுதேச மக்­களின் ஆட்­சியை ஏற்­ப­டுத்தி சாதனை படைத்தார்.

இளமை

நெல்சன் மண்­டேலா 1918ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் திகதி தென் ஆபி­ரிக்­காவின் முவே­சோ­வி­லுள்ள குலு எனும் கிரா­மத்தில் பிறந்தார். இவ­ரது தந்தை சோசா பழங்­குடி இன மக்கள் தலை­வ­ராவார். இவரின் தந்­தைக்கு நான்கு மனை­விகள். 4 ஆண்­களும் 9 பெண்­க­ளு­மாக மொத்தம் 13 பிள்­ளைகள். நெல்சன் மண்­டேலா மூன்­றா­வது மனை­விக்கு மக­னாகப் பிறந்­தவர். இவரின் முழுப்­பெயர் நெல்சன் ரோபி­சலா மண்­டேலா ஆகும். எனினும். இவரை நெல்சன் மண்­டேலா என்றே பொது­வாக அழைப்­பார்கள். இவர் சிறு­வ­யதில் குத்துச் சண்டை வீர­ரா­கவே அறியப் பெற்றார்.

அந்தக் குடும்­பத்­தி­லி­ருந்து முதன் முதலில் பள்ளி சென்ற மண்­டேலா, இளம் வயதில் ஆடு, மாடு மேய்த்­துக்­கொண்டே பள்­ளிக்­கூ­டத்தில் படித்தார். இவரின் பெயரின் முன்னால் உள்ள "நெல்சன்" இவர் கல்வி கற்ற முதல் பள்­ளியின் ஆசி­ரி­ய­ரினால் சூட்­டப்­பட்­டது.

கல்­வி­ய­றிவைப் பெறு­வதில் பெரிதும் நாட்டம் கொண்ட மண்­டேலா, தனது பட்­டப்­ப­டிப்புக் கல்­வியை மேற்­கொண்­ட­துடன், 1941-ஆம் ஆண்டு ஜோஹ­னஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்­டக்­கல்வி படித்தார். அதன் பின்னர் இவர் தங்கச் சுரங்க பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­ராகப் பணி­யாற்­றினார். அப்­போது 'நோமதாம் சங்கர்' என்ற செவி­லி­யரைத் திரு­மணம் செய்து கொண்டார். இவர் ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் இயக்­கத்தில் தீவி­ர­மாக ஈடு­பட்டு இருந்­ததால் மனை­விக்கும் அவ­ருக்கும் இடையே கருத்து வேறு­பாடு ஏற்­பட்­டது.

பின்னர் தென் ஆபி­ரிக்க அரசு, ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் கட்­சியைத் தடை செய்து மண்­டேலா மீது வழக்கு தொட­ரப்­பட்­டது. ஐந்­தாண்­டு­க­ளாக அந்த வழக்கு விசா­ரணை நடந்து கொண்­டி­ருந்­த­போது 1958 ஆம் ஆண்டு 'வின்னி மடிகி லேனா' என்­ப­வரை இரண்­டா­வ­தாக மணந்தார். வின்னி தனது கண­வரின் கொள்­கை­க­ளுக்­காகப் போராடி வந்தார். இவர் மூன்­றா­வ­தாக கிரேக்கா மாசெல் என்­ப­வரை 1998 ஆம் ஆண்டு திரு­மணம் செய்தார். மண்­டே­லா­வுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்­தை­களும் இரண்­டா­வது மனைவி மூலம் 2 குழந்­தை­களும் உள்­ளனர்.

அர­சியல்

தென் ஆபி­ரிக்க நாட்டில் கறுப்­பர்­களும் ெவள்ளையர்­களும் காணப்­பட்­டனர். இங்கு கறுப்­பர்கள் பெரும்­பான்­மை­யாக இருக்­கின்­ற­போ­திலும் சிறு­பான்­மை­யான வெள்­ளை­யர்­க­ளி­டமே ஆட்சி அதி­காரம் இருந்­தது.

1939 ஆம் ஆண்டில் தனது 21 ஆவது வயதில் கறுப்­பின இளை­ஞர்­களை ஒன்­றி­ணைத்து, கறுப்­பின மக்கள் ஒடுக்­கப்­ப­டு­வ­தற்கு எதி­ராகப் போராட்டம் நடத்த வேண்­டு­மென்ற எண்ணம் அவ­ரிடம் எழுந்­தது. அவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்கும் உரிமை மறுக்­கப்­பட்டு வந்­தது. இதனால் இவற்­றிற்கு எதி­ராக நாம் போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்து கறுப்­பின மக்­களை விழிப்­ப­டையச் செய்­வதில் வெற்றி கண்டார்.

1948 ஆம் ஆண்டு தென் ஆபி­ரிக்­காவின் ஆட்சிப் பொறுப்­பேற்ற அரசு, கறுப்­பின மக்­க­ளுக்­கெ­தி­ராக முறை­யற்ற நட­வ­டிக்­கை­களை எடுத்­தது. மண்­டே­லாவும் அவரின் பல்­க­லைக்­க­ழகத் தோழ­னா­கிய ஒலிவர் ரம்­போவும் இணைந்து இன ஒதுக்­க­லுக்­குள்­ளா­கிய கறுப்­பின மக்­க­ளுக்­காக சட்ட ஆலோ­ச­னை­களை வழங்­கினர்.

கறுப்­பர்­களின் நலனை பாது­காப்­ப­தற்­காக உரு­வான "ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ்" என்ற கட்­சிக்கு தலை­வ­ரானார். இவரின் தலை­மையில் அரசின் இன­வாதக் கொள்­கை­க­ளுக்கு எதி­ராக அறப் போராட்­டங்கள் முளை­யெ­டுக்க ஆரம்­பித்­தன. இவ­ரது வன்­மு­றை­யற்ற போராட்டம் வளர்ச்­சி­ய­டை­வதைக் கண்ட வெள்­ளையர் அரசு 1956 இல், அர­சுக்கு எதி­ராக புரட்சி செய்தார் என்ற குற்­ற­சாட்டின் பேரில் கைது செய்­தது. சிறையில் இருந்து வெளி­வந்த மண்­டேலா தீவி­ர­மாகச் செயற்­பட்டார். இதனால் 1960களில் ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் வேக­மாக வளர்ச்­சி­ய­டைந்­தது. 1960இல் ஆபி­ரிக்­கர்­க­ளுக்கு விசேட கட­வுச்­சீட்டு வழங்­கு­வ­தற்கு எதி­ராக ஊர்­வலம் ஒன்றை ஷார்­பெவில் (Sharpeville) நகரில் நடத்­தினர். இதன்­போது பொலி­ஸாரின் துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் 69 பேர் கொல்­லப்­பட்­டனர். 1956ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி அன்று தேசத்­து­ரோகக் குற்றச் சாட்­டு­க­ளுக்­காக மண்­டே­லாவும் அவ­ரது தோழர்­களும் கைது செய்­யப்­பட்­டனர். நீண்ட சட்டப் போராட்­டத்­திற்கு பிறகு 1961 அனை­வரும் குற்­றச்­சாட்­டி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டனர்..

ஆயுதப் போராட்டம்

அறப்போர் மூலம் போராடி உரி­மை­களைப் பெற முடி­யா­தென்­பதை உணர்ந்துகொண்ட மண்­டேலா ஆயுத வழி­மு­றையை நாடினார். இத­னை­ய­டுத்து அவரைக் கைது செய்ய வெள்­ளை­யாட்­சி­யினர் முடிவு செய்­தனர். 1961-ஆம் ஆண்டு ஆபி­ரிக்க தேசிய காங்­கி­ரஸின் ஆயு­தப்­படைத் தலை­வ­னாக மண்­டேலா உரு­வெ­டுத்தார். வெளி­நாட்டு நட்பு சக்­தி­க­ளி­ட­மி­ருந்து பணம் மற்றும் இரா­ணுவ உத­வி­களைப் பெற்று, அரச மற்றும் இரா­ணுவ கேந்­திர நிலை­யங்கள் மீது கெரில்லா பாணி­யி­லான தாக்­கு­தல்­களை ஒருங்­கி­ணைத்து நடத்­தினார்.

1961 டிசம்பர் 16 ஆம் திகதி அன்று இன­வெ­றிக்கு எதி­ரான முத­லா­வது தாக்­குதல் மண்­டேலா தலை­மையில் நடத்­தப்­பட்­டது. அர­சாங்கம் கடு­மை­யாகக் கெடு­பிடி செய்­ததால் 1961 ஆம் ஆண்டு மண்­டேலா தலை­ம­றை­வானார். அவரைப் பிடிக்க பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டது. இதனால், இவர் தலைமை வகித்த அமைப்­பி­னரின் நட­வ­டிக்­கை­களால் பொது­மக்­களும் பாதிக்­கப்­பட்­டனர். இன­வெ­றிக்கு எதி­ரான இவ­ரது போர் நட­வ­டிக்­கைகள் மனித உரி­மை­களை மீறு­வ­தாகக் குற்றம் சாட்­டப்­பட்­டது. இதனைக் காரணம் காட்டி அமெ­ரிக்­காவும் இவர் மீது பயங்­க­ர­வாத முத்­திரை குத்­தி­யது. மண்­டேலா அமெ­ரிக்­கா­வுக்குள் நுழை­வ­தற்­கான தடை ஜூலை 2008 வரை நடை­மு­றையில் காணப்­பட்­டது.

1962 ஆகஸ்ட் 05 ஆம் திகதி இவர் தங்­கி­யி­ருந்த பகு­திக்குள் மாறு வேட­ம­ணிந்து புகுந்த காவல்­து­றை­யி­னரால் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்டு கைது செய்­யப்­பட்டார். திட்­ட­மிட்­ட­படி மண்­டேலா உட்­பட ஆபி­ரிக்க தேசியக் காங்­கி­ரஸின் (African National Congress) 10 முக்கிய தலை­வர்­க­ளும் கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்­கப்­பட்­டனர்.

அர­சுக்கு எதி­ராகப் புரட்சி செய்­தமை, அமை­தியைக் குலைத்­தமை, கல­கத்தை உரு­வாக்­கி­யமை என குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. மேலும் தென் ஆபி­ரிக்க அரசைக் கவிழ்க்க முயன்­ற­தா­கவும் அவர் மீது குற்றம் சாட்­டப்­பட்­டது. மண்­டே­லா­வுக்கு 1964 -ஆம் ஆண்டு ஜுன் 12 ஆம் திகதி ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அப்­போது அவ­ருக்கு 46 வயது. அன்று ஆரம்­பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்­டு­க­ளாகத் தொடர்ந்­தன.

சிறை­வாசம்

மண்­டேலா 1962 இல் சிறையில் அடைக்­கப்­பட்டார். ஏறத்­தாழ 27 ஆண்­டுகள் சிறையில் இருந்தார். உலக வர­லாற்­றி­லேயே மண்­டே­லாவை போல் இவ்­வ­ளவு நீண்டகாலம் சிறையில் வாடிய தலை­வர்கள் கிடை­யாது. அவரை தென் ஆபி­ரிக்க அர­சாங்கம் பல ஆண்­டுகள் தனிமைச் சிறையில் அடைத்துக் கொடுமை செய்­தது. மனை­வியைச் சந்­திப்­ப­தற்­குக்­கூட அனு­மதி மறுக்­கப்­பட்­டது. 1988 ஆம் ஆண்டு கடு­மை­யான காச நோய் ஏற்­பட்டு, மர­ணத்தின் எல்­லைக்கே சென்றார். அதனால் வீட்­டுச்­ சிறைக்கு மாற்­றப்­பட்டார்.

விடு­த­லைக்­கான போராட்­டங்கள்

மண்­டே­லாவை விடு­தலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழு­வதும் எழுந்­தது. ஆனால் தென் ஆபி­ரிக்க நிற­வெறி ஆட்­சியின் தலை­வ­ராக இருந்த பி.டபிள்யூ. போத்தா, மண்­டே­லாவை விடு­தலை செய்ய மறுத்து வந்தார். மண்­டே­லாவை விடு­தலை செய்­யும்­படி வற்­பு­றுத்தி மண்­டே­லாவின் மனைவி தலை­மையில் ஆர்ப்­பாட்­டங்­களும், ஊர்­வ­லங்­களும் தொடர்ந்து நடை­பெற்று வந்­தன.

"மன்­னிப்பு கேட்டால் விடு­தலை செய்­கிறோம்" என்று தென் ஆபி­ரிக்க அரசு ஆசை காட்­டி­யது. ஆனால், மண்­டேலா மன்­னிப்புக் கேட்க மறுத்­து­விட்டார். தென் ஆபி­ரிக்­காவில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு புதிய அதி­ப­ராக டி. க்ளார்க் என்­பவர் பத­விக்கு வந்தார். அவர் மண்­டே­லாவை விடு­தலை செய்ய முன்­வந்தார்.

விடு­தலை

அப்­போ­தைய தென் ஆபி­ரிக்கா அரசுத் தலை­வ­ரான பிரெட்ரிக் வில்­லியம் டி க்ளார்க் ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் மீதான தடையை நீக்கி, 11.2.1990 அன்று மண்­டே­லா­வுக்கு விடு­தலை வழங்­கினார். இதன்­போது அவ­ருக்கு வயது 71 ஆகும்.

வர­வேற்பு

மண்­டே­லாவை வர­வேற்க உல கம் முழு­வதும் ஏற்­பா­டுகள் நடந்­தன. மண்­டே­லா­வுடன் அவர் மனைவி வின்னி கை கோர்த்­த­படி சிறையிலிருந்து வெளியே வந்தார். சிறைச்­சா­லையின் வாசலில் ஆபி­ரிக்க நாட்டுத் தலை­வர்கள் மற்றும் ஏரா­ள­மான தொண்­டர்கள் அவரை உற்­சா­கத்­து­டனும், மகிழ்ச்­சி­யு­டனும் வர­வேற்­றனர். பின்னர் இவரை காவ­லர்கள் பாது­காப்­பாக கேப்­டவுன் நக­ருக்கு அழைத்துச் சென்­றனர். மண்­டேலா விடு­தலை செய்­யப்­பட்­டதை உலகத் தலை­வர்கள் பலர் வர­வேற்­றார்கள்.

விரு­துகள்

1993ஆம் ஆண்டு உலக அமை­திக்­கான நோபல் பரிசு இவ­ருக்கு வழங்­கப்­பட்­டது. அமைதி மற்றும் நல்­லி­ ணக்­கத்­துக்­கான மகாத்மா காந்தி சர்­வ­ தேச விருது நெல்சன் மண்­டே­லா­வுக்கு வழங்கப்பட்டது. 1990 இல் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பாரத ரத்னா' விருதும் வழங்கப்பட்டது.

தென் ஆபிரிக்காவின் ஜனாதிபதியாக

1994 மே 10ஆம் திகதி தென் ஆபிரிக்காவின் ஜனாதிபதியானார். நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென் ஆபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி யாகத் தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்தபின் 1999 இல் பதவியை விட்டு விலகினார். இவர் 2 ஆவது முறை அதிபர் பதவிக்கு போட்டியிட மறுத்திருந்தார்.

தென் ஆபி­ரிக்­கா­வுக்கு மட்­டு­மன்றி முழு உலக மக்­க­ளுக்கும் உதா­ரண புரு­ஷ­ராகத் திகழ்ந்த கறுப்பினத்தவர்களின் விடிெவள்ளி நெல்சன் மண்­டே­லாவின் இழப்பு உண்­மை­யி­லயே நம் எல்­லோரு க்கும் பேரி­ழப்பாகும்.


எம்.எம்.சில்வெஸ்டர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல