பொன்னணிகளின் போர் என வர்ணிக்கப்படும் யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் - வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி நேற்றைய தினம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றபோது சென். பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவனும் இளம் குடும்பஸ்தருமான அமலன் மைதானத்தில் வைத்து 50 இற்கும் மேற்பட்ட நபர்களினால் ரம்ஸினாலும், கை, கால்களினால் அடித்தும் உதைத்தும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பலபேர் பார்த்திருக்க இடம் பெற்ற மேற்படி படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய எவரையும் பொலிஸார் கைது செய்யாமல் விட்டமையும் பாட சாலைச் சமூகத்தினர் தடுக்க முற்படாமல் அசண்டையின மாக இருந்தமையும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போட்டி
யாழ்.சென்பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை கல்லூரிக்கும் இடையிலான பொன்னணிகளின் போர் என்று வர்ணிக்கப்படும் ஒரு நாள் துடுப்பாட்டப் போட்டி நேற்றையதினம் வட்டுக் கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
துடுப்பாட்டத்தில் சென் பற்றிக் கல்லூரி அணி ஆதிக்கம் செலுத்தியபோது பிற்பகல் 1.45 மணியளவில் யாழ்ப்பாண கல்லூரியின் பழைய மாணவர் கள் குழுமைதானத்திற்குள் நுழைந்தது,
படுகொலைச் சம்பவம்
பார்வையாளர்கள் அரங்கில் சென் பற்றிக் கல்லூரி ஆசிரியர் களுடன் தனது கல்லூரி மாண வர்களின் துடுப்பாட்டத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த வேளை அரங்கிற்கு கீழே பற்றிக்ஸ் மாணவர்கள் ஆரவாரப்பட் டுக் கொண்டிருந்தனர். இதன்போது குறித்த மாணவனும் கீழே இறங்கி வந்து அந்த மாணவனுடன் நின்ற வேளை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர்கள் குழு அங்குவந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
மதுபோதையில் இருந்த தாக கூறப்படும் மேற்படி யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் குழுவினர் தமது கையில் வைத்திருந்த ரம்ஸினால் அமலனின் தலையில் பலமாக அடித்துள்ளனர்.
இதனையடுத்து மூர்ச்சையாகி அவர் கீழேவிழுந்த போது 50க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து தாக்குதல் மேற் கொண்டுள்ளனர்.
கைகளினால் அடித்தும் கால்களினால் உதைத்தும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது சில நபர்களி னால் அமலனின் அந்தரங்க உறுப்பின் மீதும் பலமாக காலி னால் உதைக்கப்பட்டுள்ளது.
வரும் வழியில்
சம்பவத்தில் படுகாய மடைந்த நிலையில் மயக்கத்திலிருந்தவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவோ அல்லது தாக்குதல் தாரிகளிடமிருந்து மீட்கவோ எவரும் நடவடிக்கை மேற் கொள்ளவில்லை.இதனால் அவர் வைத்தியசாலைக்கு கொண்டுவரும் வழியில் பரிதாபமாக உயிரி ழந்தார்.
பொலிஸ் மீது குற்றச்சாட்டு
சம்பவத்தில் ஒருவரை பலர் பலபேர் முன்னிலையில் வைத்து கடுமையாக தாக்கும் போது பாதுகாப்பு கடமைக்காக வருகை தந்திருந்த வட்டுக்கோட்டை பொலிஸ்நிலைய பொலிஸார் சம்பவத்தை தடுக்கவோ தாக் குதல் தாரிகளை கைது செய்யவோ எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாது கை கட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்ததாக உயிரிழந்தவரின் உற வினர்கள் சரமாரியாக குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
அத்துடன் அவர்களின் கண்ணுக்கு முன்னாலேயே குறித்த தாக்குதல் நடத்தப்பட் டுள்ளது.
அத்துடன் இறந்தவர்களின் நண்பர்கள் தாக்குதல் குறித்து பொலிஸாருடன் கூறியும் அவர்கள் எதுவிதமான நடவடிக்கை களையும் மேற்கொள்ளவில்லை.அத்துடன் தகவல் வழங் கியவர்களை கைது செய்வோம் என எச்சரிக்கை செய்து அனுப் பியிருந்ததாக குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.
அத்துடன் குறித்த கும்ப லுக்கு சம்பவ இடத்தில் சிவில் உடையில் நின்ற பொலிஸ் ஒருவரால் தொலைபேசி தகவல் தெரிவிக்கப்பட்டதனை யடுத்து மைதானத்தை விட்டு தப்பியோடிவிட்டனர்.எனினும் அவர்கள் வருகை தந்திருந்த மோட்டார் சைக்கிள்கள் மைதானத்திற்குள் நின்றதாகவும் பின்னர் பொலிஸாரினால் பொலிஸ்நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட தாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனைவிட இரண்டு பாட சாலைகளின் அதிபர்கள், ஆசிரி யர்கள் உட்பட எவரும் தாக்குதல் சம்பவத்தை கட்டுப்படுத் தவோ தாக்குதலுக்குள்ளானவரை காப்பாற்றவோ நடவ டிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.
இதேவேளை சம்பவம் தொடர் பில் நியாயம் கேட்கச்சென்ற போது பாடசாலை சமூகத்தினர் உரிய பதில் அளிக்கவில்லை எனவும் பொலிஸாரின் பாது காப்புடன் நின்று கொண்டு தம்மை விரட்டியதாகவும் குற்றம் சாட்டினர்.
வைத்தியசாலை முற்றுகை
இதேவேளை மேற்படிச் சம்பவத்தில் உயிரிழந்த அம லனின் உடல் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்ட போது உறவினர்களும் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்களும் வைத்தியசாலையினை முற்றுகையிட்டதனால் நேற்று மாலை வைத்தியசாலையின் முகப்பு வாயிலில் பெரும்பர பரப்பு ஏற்பட்டதோடு வைத்தியசாலை பாதுகாப்பு ஊழியர்களுடனும் பொலிஸாருடனும் தள்ளுமுள்ளுப்பட்டனர்.
ஒன்றரை வயதில் ஒரு பிள்ளை
துடுப்பாட்ட போட்டியினை பார்வையிடச் சென்ற யாழ். பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவரும் 24 வயதேயான இளம் குடும்பஸ்தருமான நேற்றையதினம் படுகொலை செய்யப்பட்ட யாழ்.மாட்டீன் வீதியைச் சேர்ந்த ஜெயரட்ணம் அமலனுக்கு ஒன்றரை வயதேயான ஆண்குழந்தையும் உள் ளது என்பது குறிப்பிடத்தக் கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக